1 Chronicles 24 in Nepali TRV Compare Thiru Viviliam
1 ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன:ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.2 நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.3 தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.4 இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே, எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரில் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.5 எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.6 நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.⒫7 சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு யோயாரிபுக்கு; இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு;8 மூன்றாவது ஆரிமுக்கு; நான்காவது செயோரிமுக்கு;9 ஐந்தாவது மல்கியாவுக்கு; ஆறாவது மியாமினுக்கு;10 ஏழாவது அக்கோட்சுக்கு; எட்டாவது அபியாவுக்கு;11 ஒன்பதாவது ஏசுவாவுக்கு; பத்தாவது செக்கனியாவுக்கு;12 பதினொன்றாவது எலியாசிபுக்கு; பன்னிரண்டாவது யாக்கிமுக்கு;13 பதின்மூன்றாவது உப்பாவுக்கு; பதினான்காவது எசேபயாவுக்கு;14 பதினைந்தாவது பில்காவுக்கு; பதினாறாவது இம்மேருக்கு;15 பதினேழாவது ஏசீருக்கு; பதினெட்டாவது அப்பிசேசுக்கு;16 பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;17 இருபத்தொன்றாவது யாக்கினுக்கு; இருபத்திரண்டாவது காமுலுக்கு;18 இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.⒫19 இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.20 எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;21 இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.⒫22 இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்;23 இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.24 உசியேலின் புதல்வர், மீக்கா; மீக்காவின் புதல்வர் சாமீர்;25 மீக்காவின் சகோதரர் இசியா; இசியாவின் புதல்வருள் செக்கரியா;26 மெராரியின் புதல்வர் மக்லி, மூசி; மற்றும் அவர் மகன் யகசியா;27 மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்; சோகாம், சக்கூர், இப்ரி.28 மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்;29 மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல்.30 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.⒫31 இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.