நெகேமியா 5:7
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,
Tamil Indian Revised Version
என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,
Tamil Easy Reading Version
நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன்.
Thiru Viviliam
நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்?” பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.
King James Version (KJV)
Then I consulted with myself, and I rebuked the nobles, and the rulers, and said unto them, Ye exact usury, every one of his brother. And I set a great assembly against them.
American Standard Version (ASV)
Then I consulted with myself, and contended with the nobles and the rulers, and said unto them, Ye exact usury, every one of his brother. And I held a great assembly against them.
Bible in Basic English (BBE)
And after turning it over in my mind, I made a protest to the chiefs and the rulers, and said to them, Every one of you is taking interest from his countryman. And I got together a great meeting of protest.
Darby English Bible (DBY)
And I consulted with myself; and I remonstrated with the nobles and the rulers, and said to them, Ye exact usury, every one of his brother! And I set a great assembly against them.
Webster’s Bible (WBT)
Then I consulted with myself, and I rebuked the nobles, and the rulers, and said to them, Ye exact interest, every one of his brother. And I set a great assembly against them.
World English Bible (WEB)
Then I consulted with myself, and contended with the nobles and the rulers, and said to them, You exact usury, everyone of his brother. I held a great assembly against them.
Young’s Literal Translation (YLT)
and my heart reigneth over me, and I strive with the freemen, and with the prefects, and say to them, `Usury one upon another ye are exacting;’ and I set against them a great assembly,
நெகேமியா Nehemiah 5:7
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,
Then I consulted with myself, and I rebuked the nobles, and the rulers, and said unto them, Ye exact usury, every one of his brother. And I set a great assembly against them.
| וַיִּמָּלֵ֨ךְ | wayyimmālēk | va-yee-ma-LAKE | |
| לִבִּ֜י | libbî | lee-BEE | |
| עָלַ֗י | ʿālay | ah-LAI | |
| וָֽאָרִ֙יבָה֙ | wāʾārîbāh | va-ah-REE-VA | |
| אֶת | ʾet | et | |
| הַֽחֹרִ֣ים | haḥōrîm | ha-hoh-REEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַסְּגָנִ֔ים | hassĕgānîm | ha-seh-ɡa-NEEM | |
| וָאֹֽמְרָ֣ה | wāʾōmĕrâ | va-oh-meh-RA | |
| לָהֶ֔ם | lāhem | la-HEM | |
| מַשָּׁ֥א | maššāʾ | ma-SHA | |
| אִישׁ | ʾîš | eesh | |
| בְּאָחִ֖יו | bĕʾāḥîw | beh-ah-HEEOO | |
| אַתֶּ֣ם | ʾattem | ah-TEM | |
| נֹשִׁ֑אים | nōšiym | noh-SHEE-m | |
| וָֽאֶתֵּ֥ן | wāʾettēn | va-eh-TANE | |
| עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM | |
| קְהִלָּ֥ה | qĕhillâ | keh-hee-LA | |
| גְדוֹלָֽה׃ | gĕdôlâ | ɡeh-doh-LA |
Cross Reference
யாத்திராகமம் 22:25
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
லேவியராகமம் 25:36
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.
உபாகமம் 23:19
கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
லேவியராகமம் 19:15
நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
உபாகமம் 15:2
விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.
உபாகமம் 24:10
பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.
2 நாளாகமம் 19:6
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
சங்கீதம் 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
எசேக்கியேல் 22:12
இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
தீத்து 2:15
இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
1 தீமோத்தேயு 5:20
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
கலாத்தியர் 2:11
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
சங்கீதம் 15:1
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
சங்கீதம் 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
நீதிமொழிகள் 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
எசேக்கியேல் 45:9
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மத்தேயு 18:17
அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
2 நாளாகமம் 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.
Tags என் மனதிலே ஆலோசனைபண்ணி பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து
Nehemiah 5:7 in Tamil Concordance Nehemiah 5:7 in Tamil Interlinear Nehemiah 5:7 in Tamil Image