1அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the first month of the second year after they were come out of the land of Egypt, saying,
2குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.Let the children of Israel also keep the passover at his appointed season.
3இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.In the fourteenth day of this month, at even, ye shall keep it in his appointed season: according to all the rites of it, and according to all the ceremonies thereof, shall ye keep it.
4அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.And Moses spake unto the children of Israel, that they should keep the passover.
5அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.And they kept the passover on the fourteenth day of the first month at even in the wilderness of Sinai: according to all that the LORD commanded Moses, so did the children of Israel.
6அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:And there were certain men, who were defiled by the dead body of a man, that they could not keep the passover on that day: and they came before Moses and before Aaron on that day:
7நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுΤ்தாĠΪடߠΕ்கl நாங்களύ விலக்ՠΪ்ʠΟ்ߠοருக்கவேண்டியது என்ன என்றார்கள்.And those men said unto him, We are defiled by the dead body of a man: wherefore are we kept back, that we may not offer an offering of the LORD in his appointed season among the children of Israel?
8மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.And Moses said unto them, Stand still, and I will hear what the LORD will command concerning you.
9கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
10நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.Speak unto the children of Israel, saying, If any man of you or of your posterity shall be unclean by reason of a dead body, or be in a journey afar off, yet he shall keep the passover unto the LORD.
11அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,The fourteenth day of the second month at even they shall keep it, and eat it with unleavened bread and bitter herbs.
12விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.They shall leave none of it unto the morning, nor break any bone of it: according to all the ordinances of the passover they shall keep it.
13ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.But the man that is clean, and is not in a journey, and forbeareth to keep the passover, even the same soul shall be cut off from among his people: because he brought not the offering of the LORD in his appointed season, that man shall bear his sin.
14ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.And if a stranger shall sojourn among you, and will keep the passover unto the LORD; according to the ordinance of the passover, and according to the manner thereof, so shall he do: ye shall have one ordinance, both for the stranger, and for him that was born in the land.
15வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.And on the day that the tabernacle was reared up the cloud covered the tabernacle, namely, the tent of the testimony: and at even there was upon the tabernacle as it were the appearance of fire, until the morning.
16இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.So it was alway: the cloud covered it by day, and the appearance of fire by night.
17மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.And when the cloud was taken up from the tabernacle, then after that the children of Israel journeyed: and in the place where the cloud abode, there the children of Israel pitched their tents.
18கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.At the commandment of the LORD the children of Israel journeyed, and at the commandment of the LORD they pitched: as long as the cloud abode upon the tabernacle they rested in their tents.
19மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.And when the cloud tarried long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of the LORD, and journeyed not.
20மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.And so it was, when the cloud was a few days upon the tabernacle; according to the commandment of the LORD they abode in their tents, and according to the commandment of the LORD they journeyed.
21மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.And so it was, when the cloud abode from even unto the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed: whether it was by day or by night that the cloud was taken up, they journeyed.
22மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.Or whether it were two days, or a month, or a year, that the cloud tarried upon the tabernacle, remaining thereon, the children of Israel abode in their tents, and journeyed not: but when it was taken up, they journeyed.
23கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.At the commandment of the LORD they rested in the tents, and at the commandment of the LORD they journeyed: they kept the charge of the LORD, at the commandment of the LORD by the hand of Moses.
1Avarkal ekipthuthaesaththilirunthu purappatta iranndaam varusham muthalaam maathaththil Karththar seenaay vanaantharaththil Mosesyai Nnokki:And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the first month of the second year after they were come out of the land of Egypt, saying,
2Kuriththa kaalaththil Israel puththirar paskaavai aasarikkakkadavarkal.Let the children of Israel also keep the passover at his appointed season.
3Intha maatham pathinaalaanthaethi anthinaeramaana vaelaiyaakiya kuriththa kaalaththil athai aasarikkakkadaveerkal; atharkuriya ellaak kattalaiyinpatiyaeyum muraimaikalinpatiyaeyum athai aasarikkakkadaveerkal entar.In the fourteenth day of this month, at even, ye shall keep it in his appointed season: according to all the rites of it, and according to all the ceremonies thereof, shall ye keep it.
4Appatiyae paskaavai aasarikkumpati Moses Israel puththirarukkuk kattalaiyittan.And Moses spake unto the children of Israel, that they should keep the passover.
5Athinaal muthalaam maatham pathinaankaam thaethi anthinaeramaana vaelaiyil, seenaay vanaantharaththil paskaavai aasariththaarkal; Karththar Moseskkuk kattalaiyittapatiyellaam Israel puththirar seythaarkal.And they kept the passover on the fourteenth day of the first month at even in the wilderness of Sinai: according to all that the LORD commanded Moses, so did the children of Israel.
6Annaalil silar manitha piraethaththinaal theettuppattapatiyinaal paskaavai aasarikkaththakaathavarkalaayirunthaarkal; avarkal annaalilae Moseskkum aaronukkum munpaaka vanthu:And there were certain men, who were defiled by the dead body of a man, that they could not keep the passover on that day: and they came before Moses and before Aaron on that day:
7Naangal manitha piraethaththinaal theettuppattavarkal; kuriththa kaalaththil Israel puththirarotaekoodak karththarukkuk kaannikkaiyaich seluΤ்thaaĠΪdaߠΕ்kal naangalaύ vilakՠΪ்ʠΟ்ߠοrukkavaenntiyathu enna entarkal.And those men said unto him, We are defiled by the dead body of a man: wherefore are we kept back, that we may not offer an offering of the LORD in his appointed season among the children of Israel?
8Moses avarkalai Nnokki: poraுngal; Karththar ungalaikkuriththuk kattalaiyiduvathu enna entu kaetpaen entan.And Moses said unto them, Stand still, and I will hear what the LORD will command concerning you.
9Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
10Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: ungalilaakilum ungal santhathiyaarilaakilum oruvan piraethaththinaal theettuppattalum, pirayaanamaayth thoorampoyirunthaalum, karththarukkup paskaavai aasarikkavaenndum.Speak unto the children of Israel, saying, If any man of you or of your posterity shall be unclean by reason of a dead body, or be in a journey afar off, yet he shall keep the passover unto the LORD.
11Avarkal athai iranndaam maatham pathinaalaanthaethi anthinaeramaana vaelaiyil aasariththu, athaip pulippillaatha appangalodum kasappaana geeraikalodum pusiththu,The fourteenth day of the second month at even they shall keep it, and eat it with unleavened bread and bitter herbs.
12Vitiyarkaalammattum athil ontum meethiyaaka vaikkaamalum, athil oru elumpaiyum murikkaamalum, paskaavinutaiya sakala muraimaikalinpatiyum athai aasarikkakkadavarkal.They shall leave none of it unto the morning, nor break any bone of it: according to all the ordinances of the passover they shall keep it.
13Oruvan suththamullavanumaayp pirayaanam pokaathavanumaayirunthum, paskaavai aasarikkaathaeponaal, antha aaththumaa kuriththa kaalaththil karththarin paliyaich seluththaathapatiyinaal than janaththaaril iraamal araுppunndupovaan; antha manithan than paavaththaich sumappaan.But the man that is clean, and is not in a journey, and forbeareth to keep the passover, even the same soul shall be cut off from among his people: because he brought not the offering of the LORD in his appointed season, that man shall bear his sin.
14Oru parathaesi ungalidaththilae thangi, karththarukkup paskaavai aasarikkavaenndumaanaal, avan athaip paskaavin kattalaippatiyum athin muraimaiyinpatiyum aasarikkakkadavan; parathaesikkum suthaesikkum orae kattalai irukkavaenndum entu sol entar.And if a stranger shall sojourn among you, and will keep the passover unto the LORD; according to the ordinance of the passover, and according to the manner thereof, so shall he do: ye shall have one ordinance, both for the stranger, and for him that was born in the land.
15Vaasasthalam sthaapananjaெyyappatta naalilae, maekamaanathu saatchiyin koodaaramaakiya vaasasthalaththai mootittaு; saayangaalamaanapothu, vaasasthalaththinmael akkinimayamaana oru thottamunndaayittaு; athu vitiyarkaalamattum irunthathu.And on the day that the tabernacle was reared up the cloud covered the tabernacle, namely, the tent of the testimony: and at even there was upon the tabernacle as it were the appearance of fire, until the morning.
16Ippati niththamum irunthathu; pakalil maekamum, iravil akkiniththottamum athai mootikkonntirunthathu.So it was alway: the cloud covered it by day, and the appearance of fire by night.
17Maekam koodaaraththilirunthu maelae elumpumpothu Israel puththirar pirayaanampannnuvaarkal; maekam thangumidaththil Israel puththirar paalayamiranguvaarkal.And when the cloud was taken up from the tabernacle, then after that the children of Israel journeyed: and in the place where the cloud abode, there the children of Israel pitched their tents.
18Karththarutaiya kattalaiyinpatiyae Israel puththirar pirayaanappaduvarkal; karththarutaiya kattalaiyinpatiyae paalayamiranguvaarkal; maekam vaasasthalaththinmael thangiyirukkum naalellaam avarkal paalayaththil thangiyiruppaarkal.At the commandment of the LORD the children of Israel journeyed, and at the commandment of the LORD they pitched: as long as the cloud abode upon the tabernacle they rested in their tents.
19Maekam nedunaal vaasasthalaththinmael thangiyirukkumpothu, Israel puththirar pirayaanappadaamal karththarin kaavalaik kaaththukkonntiruppaarkal.And when the cloud tarried long upon the tabernacle many days, then the children of Israel kept the charge of the LORD, and journeyed not.
20Maekam silanaal maaththiram vaasasthalaththinmael thangiyirukkumpothu, karththarutaiya kattalaiyinpatiyae paalayamirangiyirunthu, karththarutaiya kattalaiyinpatiyae pirayaanappaduvaarkal.And so it was, when the cloud was a few days upon the tabernacle; according to the commandment of the LORD they abode in their tents, and according to the commandment of the LORD they journeyed.
21Maekam saayangaalanthodangi vitiyarkaalamattum irunthu, vitiyarkaalaththil uyara elumpumpothu, udanae pirayaanappaduvaarkal; pakalilaakilum iravilaakilum maekam elumpumpothu pirayaanappaduvaarkal.And so it was, when the cloud abode from even unto the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed: whether it was by day or by night that the cloud was taken up, they journeyed.
22Maekamaanathu iranndunaalaavathu oru maathamaavathu oru varushamaavathu vaasasthalaththinmael thangiyirukkumpothu, Israel puththirar pirayaanampannnnaamal paalayamirangiyiruppaarkal; athu uyara elumpumpotho pirayaanappaduvaarkal.Or whether it were two days, or a month, or a year, that the cloud tarried upon the tabernacle, remaining thereon, the children of Israel abode in their tents, and journeyed not: but when it was taken up, they journeyed.
23Karththarutaiya kattalaiyinpatiyae paalayamiranguvaarkal; karththarutaiya kattalaiyinpatiyae pirayaanampannnuvaarkal; Karththar Mosesyaikkonndu kattalaiyidukirapatiyae karththarutaiya kaavalaik kaaththukkolvaarkal.At the commandment of the LORD they rested in the tents, and at the commandment of the LORD they journeyed: they kept the charge of the LORD, at the commandment of the LORD by the hand of Moses.