1நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.When I would have healed Israel, then the iniquity of Ephraim was discovered, and the wickedness of Samaria: for they commit falsehood; and the thief cometh in, and the troop of robbers spoileth without.
2அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.And they consider not in their hearts that I remember all their wickedness: now their own doings have beset them about; they are before my face.
3ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களிலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.They make the king glad with their wickedness, and the princes with their lies.
4அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.They are all adulterers, as an oven heated by the baker, who ceaseth from raising after he hath kneaded the dough, until it be leavened.
5நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.In the day of our king the princes have made him sick with bottles of wine; he stretched out his hand with scorners.
6அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல், ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்.For they have made ready their heart like an oven, whiles they lie in wait: their baker sleepeth all the night; in the morning it burneth as a flaming fire.
7அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.They are all hot as an oven, and have devoured their judges; all their kings are fallen: there is none among them that calleth unto me.
8எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிபோடாத அப்பம்.Ephraim, he hath mixed himself among the people; Ephraim is a cake not turned.
9அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.Strangers have devoured his strength, and he knoweth it not: yea, gray hairs are here and there upon him, yet he knoweth not.
10இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.And the pride of Israel testifieth to his face: and they do not return to the LORD their God, nor seek him for all this.
11எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.Ephraim also is like a silly dove without heart: they call to Egypt, they go to Assyria.
12அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன், அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.When they shall go, I will spread my net upon them; I will bring them down as the fowls of the heaven; I will chastise them, as their congregation hath heard.
13அவர்கள் என்னைவிட்டு அலைந்துதிரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம் பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.Woe unto them! for they have fled from me: destruction unto them! because they have transgressed against me: though I have redeemed them, yet they have spoken lies against me.
14அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.And they have not cried unto me with their heart, when they howled upon their beds: they assemble themselves for corn and wine, and they rebel against me.
15நான் அவர்களை தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.Though I have bound and strengthened their arms, yet do they imagine mischief against me.
16திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.They return, but not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
1Naan en janaththin siraiyiruppaith thiruppumpothum, naan isravaelai kunamaakka virumpumpothum, eppiraayeemin akkiramamum samaariyaavin pollaappukalum velippaduththappadum; avarkal vanjanai seykiraarkal; thirudan ullae varukiraan; veliyae parikaararin koottaththaar kollaiyidukiraarkal.When I would have healed Israel, then the iniquity of Ephraim was discovered, and the wickedness of Samaria: for they commit falsehood; and the thief cometh in, and the troop of robbers spoileth without.
2Avarkal pollaappaiyellaam naan ninaivil vaiththirukkiraேn entu avarkal thangal iruthayaththil sinthikkirathillai; ippothum avarkalutaiya kiriyaikal avarkalaich soolnthukonndathu; avaikal en mukaththukku mun irukkirathu.And they consider not in their hearts that I remember all their wickedness: now their own doings have beset them about; they are before my face.
3Raajaavaith thangal pollaappinaalum, athipathikalaith thangal poykalilum santhoshappaduththukiraarkal.They make the king glad with their wickedness, and the princes with their lies.
4Avarkal ellaarum vipasaarakkallar; appanjudukiravan erikkum aduppaippol irukkiraarkal; avan maavaip pisainthathu muthal athu uppippokumattum, analai moottamal oynthirukkiraan.They are all adulterers, as an oven heated by the baker, who ceaseth from raising after he hath kneaded the dough, until it be leavened.
5Nammutaiya raajaavin naalentu solli, athipathikal thiraatcharasath thuruththikalaal avanukku viyaathiyunndaakkukiraarkal; sarasakkaararotaekooda avan than kaiyai neettukiraan.In the day of our king the princes have made him sick with bottles of wine; he stretched out his hand with scorners.
6Avarkal pathivirukkumpothu, thangal iruthayaththai aduppaippol, aayaththappaduththukiraarkal; avarkalil alappumoottukiravan iraamuluthum thoonginaalum, kaalamaeyovental athu juvaalikkira akkiniyaay eriyum.For they have made ready their heart like an oven, whiles they lie in wait: their baker sleepeth all the night; in the morning it burneth as a flaming fire.
7Avarkal ellaarum aduppaippol analaaki, thangal niyaayaathipathikalaip patchiththaarkal; avarkalutaiya raajaakkal ellaarum vilunthaarkal; avarkalil ennai Nnokkik kooppidukiravan oruvanum illai.They are all hot as an oven, and have devoured their judges; all their kings are fallen: there is none among them that calleth unto me.
8Eppiraayeem anniyajanangalotae kalanthirukkiraan; eppiraayeem thiruppipodaatha appam.Ephraim, he hath mixed himself among the people; Ephraim is a cake not turned.
9Anniyar avanutaiya palaththaith thinkiraarkal; avano athai ariyaan; naraimayirum avanil theliththirukkirathu, avano athai ariyaathirukkiraan.Strangers have devoured his strength, and he knoweth it not: yea, gray hairs are here and there upon him, yet he knoweth not.
10Isravaelin akanthai avarkal mukaththukku munpaakach saatchiyittalum, avarkal thangal thaevanaakiya karththaridaththil thirumpaamalum, ivai ellaavattilum avaraith thaedaamalum irukkiraarkal.And the pride of Israel testifieth to his face: and they do not return to the LORD their God, nor seek him for all this.
11Eppiraayeem paethaiyaana puraavaippol irukkiraan, avanukkup puththiyillai; ekipthiyanaik kooppidukiraarkal; aseeriyanidaththukkum pokiraarkal.Ephraim also is like a silly dove without heart: they call to Egypt, they go to Assyria.
12Avarkal pokumpothu, en valaiyai avarkalmael veesuvaen, avarkalai aakaayaththup paravaikalaippola geelae vilappannnuvaen; avarkalutaiya Sabaiyil kaelviyaanathinpatiyae avarkalai thanntippaen.When they shall go, I will spread my net upon them; I will bring them down as the fowls of the heaven; I will chastise them, as their congregation hath heard.
13Avarkal ennaivittu alainthuthirikirapatiyinaal avarkalukku aiyo! Avarkalukkuk kaeduvarum; enakku virothamaaka iranndakam pannnninaarkal; naan avarkalai meettirunthum, avarkal enakku virothamaakap paesukiraarkal.Woe unto them! for they have fled from me: destruction unto them! because they have transgressed against me: though I have redeemed them, yet they have spoken lies against me.
14Avarkal thangal padukkaikalil alaraுkirapothu, thangal iruthayaththil ennai Nnokkik kooppidukirathillai; avarkal thaaniyaththukkaakavum thiraatcharasaththukkaakavum koodukiraarkal; ennai veraுththu vilakippokiraarkal.And they have not cried unto me with their heart, when they howled upon their beds: they assemble themselves for corn and wine, and they rebel against me.
15Naan avarkalai thanntiththaen; avarkalutaiya puyangal thirumpap palappadavumpannnninaen; aakilum enakku virothamaakap pollaappu ninaikkiraarkal.Though I have bound and strengthened their arms, yet do they imagine mischief against me.
16Thirumpukiraarkal, aanaalum unnathamaanavaridaththirku alla; mosampokkukira villaippolirukkiraarkal; avarkalutaiya athipathikal thangal naavinutaiya ukkiraththinimiththam pattayaththaal viluvaarkal; ithuvae ekipthuthaesaththinimiththam avarkalukku varum ninthai.They return, but not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.