பல்லவி
யேசுவே திருச்சபை ஆலயத்தின்
என்றும் நிலைக்கும் மூலைக்கல்.
அனுபல்லவி
பேசற் கரிய மூலைக்ககல் அவர்
பெரும் மாளிகையைத் தாங்கும் கல். – யேசுவே
சரணங்கள்
1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்
அவமதித்திட்ட இந்த கல்;
வாகாய் ஆலய மூலைக் கமைந்து
வடிவாய்த் தலைக்கல்லான கல். – யேசுவே
2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்
அதிசயமான அன்பின் கல்;
ஞாலத்துப் பல ஜாதிகள் தமை
நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். – யேசுவே
3. ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்
உன்னத விலைபெற்ற கல்;
எப்போதும் பரஞ்சோதியாய் நீதி
இலங்கும் சூரியனான கல். – யேசுவே
4. காற்றுக்கும் கன மழைக்கும் அசையா
கடிய மாபலமான கல்;
மாற்றிக் கலியை ஆற்றுத் துயரைத்
தேற்றி சபையைக் காக்குங் கல். – யேசுவே
5. என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை,
எழிலுறவே இக் கல்லின்மேல்;
நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன்
நாணம் அடையாள மெய்தானே. – யேசுவே
Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை Lyrics in English
Pallavi
Yaesuvae thiruchSabai aalayaththin
Entum nilaikkum moolaikkal.
Anupallavi
Paesar kariya moolaikkakal avar
Perum maalikaiyaith thaangum kal. – yaesuvae
Saranangal
1. Aakaathithentu veedu kattuvor
Avamathiththitta intha kal;
Vaakaay aalaya moolaik kamainthu
Vativaayth thalaikkallaana kal. – yaesuvae
2. Aalayamellaam isaivaay innaikkum
Athisayamaana anpin kal;
Njaalaththup pala jaathikal thamai
Natpura ontaych serkkum kal. – yaesuvae
3. Oppillaa arum maatchimai yuraுm
Unnatha vilaipetta kal;
Eppothum paranjaோthiyaay neethi
Ilangum sooriyanaana kal. – yaesuvae
4. Kaattaுkkum kana malaikkum asaiyaa
Katiya maapalamaana kal;
Maattik kaliyai aattaுth thuyaraith
Thaetti Sabaiyaik kaakkung kal. – yaesuvae
5. Entum kattuvom intha aalayaththai,
Eliluravae ik kallinmael;
Nantay ikkallil nampikkai vaippon
Naanam ataiyaala meythaanae. – yaesuvae
PowerPoint Presentation Slides for the song Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Thirusabai – யேசுவே திருச்சபை PPT
Yesuvae Thirusabai PPT

