Bible
Lyrics PPT

Thuthippom Nandriyudan PPT - துதிப்போம் நன்றியுடன்

துதிப்போம் நன்றியுடன்
சென்ற காலம் முழுவதும்
காத்த தேவனை இதய நிறைவுடனே

Slide 1

துதிப்போம் நன்றியுடன் சென்ற காலம் முழுவதும் காத்த தேவனை இதய நிறைவுடனே

Slide 2

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம் ஆனந்தமாகப் பாடிடுவோம் என்றென்றும் அவர் செய்த நன்மைகளை நினைத்தே போற்றிடுவோம்

Slide 3

இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த எபெநேசர் அவரே – இன்னமும் வாழ்வில் நம்முடன் இருக்கும் இம்மானுவேல் அவரே

Slide 4

துன்பம் துயரம் தொல்லை இடர்கள் எம்மை சூழ்ந்த போதும் ஓங்கிய புயத்தால் பாதுகாத்த வல்ல தேவன் அவரே

Slide 5

நல்ல சுகமும் பெலனும் தந்து நல் வழி நடத்தினாரே கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட நல்ல தேவன் அவரே

Slide 6

கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து சோர்ந்திடும் வேளையிலே பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர் ஊழியப் பாதையிலே

Thuthippom nandriyudan PowerPoint

Thuthippom Nandriyudan - துதிப்போம் நன்றியுடன் Lyrics

Thuthippom Nandriyudan PPT

Download Thuthippom nandriyudan Tamil PPT