Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paathakan En Vinaitheer - பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்

2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்

Paathakan En Vinaitheer Lyrics in English

Paathakan en vinaitheer, aiyaa; kirupaakaraa, nin
Paadu ninain thenaich ser, aiyaa.

Theethakattavae sirantha
Senn ulakinimai vittu,
Poothalath thukanthu vantha
Punnnniyanae, yaesu thaevaa. — paathakan

1. Vanthuraுm eppaavikalaiyum – angaீkarikkum
Maasillaatha yaesu naathanae,
Unthan idam vanthulamae uruki aluthamaathu
Munthimikach seytha paavam muluthum poraுththaay anto? — paathakan

2. Sinthina un uthiram athae – theeyon maraththaich
Sinnapinnam seyya vallathae;
Pantham ura untan valap paakaamutta kalvanaiyae
Vinthaiyura vaeratchiththa vaethanae, avvithamaayae — paathakan

3. Arpavisuvaasamulan aam – atiyaenai ini
Aatharippathaar? Un thanjamae;
Tharparaa, unaith tharisith thanti nampitaen, enavae
Seppina thomaavukkuppol, thiru urukkaatchi thanthu. — paathakan

PowerPoint Presentation Slides for the song Paathakan En Vinaitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின் PPT
Paathakan En Vinaitheer PPT

பாதகன் யேசு வினைதீர் ஐயா கிருபாகரா நின் பாடு நினைந் தெனைச் சேர் ஐயா தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை பூதலத் துகந்து புண்ணியனே தமிழ்