Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே

1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.

Ivvanthi Neraththil – இவ்வந்தி நேரத்தில் எங்கே Lyrics in English

1. Ivvanthi naeraththil engae poyth thanguveer en Yesuvae en nenjil neer piravaesikkum maa paakkiyaththai arulum. 2. Aa, naesarae neer atiyaen vinnnappaththukkinangumaen en nenjin vaanjai thaevareer oruvarae entariveer. 3. Poluthu saaynthupoyittaு iraa nerungi vanthathu meyppoluthae, iraavilum ivvaelaiyai vidaathaeyum. 4. Aa, ennaip paava raaththiri pitiththuk kedukkaathini neer oli veesiyarulum ratchippin paathai kaannpiyum. 5. Neer en katai ikkattilum ennotirunthu ratchiyum ummaip pitiththup pattinaen neer poyviteer entarivaen.

PowerPoint Presentation Slides for the song Ivvanthi Neraththil – இவ்வந்தி நேரத்தில் எங்கே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivvanthi Neraththil – இவ்வந்தி நேரத்தில் எங்கே PPT
Ivvanthi Neraththil PPT

நீர் இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் இயேசுவே நெஞ்சில் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும் நேசரே அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் தமிழ்