Bible
Lyrics PPT

Gunapadu Paavi Deva PPT - குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி - இப்போ

Slide 1

குணப்படு பாவி, தேவ கோபம் வரும் மேவி – இப்போ

Slide 2

அனுபல்லவி

Slide 3

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக நீ

Slide 4

சரணங்கள்

Slide 5

(New Version ) வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்; தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;

Slide 6

நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.

Slide 7

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர் கற்பனையைத் துறந்தாய், பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப் பாவ வழி திரிந்தாய், புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா, உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

Slide 8

2. துக்கமடையாயோ? பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ? – மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

Slide 9

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப்போல் பாவி மனுஷியைப்போல் – மனம் பதைத்த பேதுருபோல், தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

Slide 10

4. உன்னை நீ நம்பாதே! – இவ் வுலகையும் நம்பாதே; பொன்னை நீ நம்பாதே – எப் பொருளையும் நம்பாதே; தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ PowerPoint

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ Lyrics

Gunapadu Paavi Deva PPT

Download Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ Tamil PPT