Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

சரணங்கள்

(New Version )
வேதத்தில் உன் தனை பார் – அந்த
வேத விதிப்படி நேர்
நீதியை செய்தவனார்?- தூய
நின்மலன் வாக்க தோ கூர்;
தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Gunapadu Paavi Deva – குணப்படு பாவி தேவ Lyrics in English

Kunappadu paavi, thaeva
Kopam varum maevi – ippo

Anupallavi

Kanappoluthinil kaayam marainthupom
Kaalamirukkaiyil seelamathaaka nee

Saranangal

(New Version )
Vaethaththil un thanai paar – antha
Vaetha vithippati naer
Neethiyai seythavanaar?- thooya
Ninmalan vaakka tho koor;
Theethuraுm paaviyin theemaiyarinthukol;
Naathan Kristhu ippothae uraikkiraar.

1. Karththanai nee maranthaay – avar
Karpanaiyaith thuranthaay,
Pakthiyinmai therinthaay – pollaap
Paava vali thirinthaay,
Puththiketta aattuk kuttiyae oti vaa,
Uththama maeyppanaar kaththi yalaikkiraar

2. Thukkamataiyaayo? Paavi
Thuyaramaakaayo?
Mikkap pulampaayo? – manam
Melinthurukaayo?
Ikkanam paavak kasappai yunaraayo?
Thakka arumaraip pakkan thodaraayo?

3. Thaavee tharasanaippol – thannaith
Thaalththum manaaseyaippol
Paavi manushiyaippol – manam
Pathaiththa paethurupol,
Thaevanukkaerkaatha theemaiseythaenentu
Koovip pulampu nal aaviyin sorpati

4. Unnai nee nampaathae! – iv
Vulakaiyum nampaathae;
Ponnai nee nampaathae – ep
Porulaiyum nampaathae;
Thannaip paliyittuth tharanni meettavar
Ninnaiyum ratchippaar , anaivaraip pattaு

PowerPoint Presentation Slides for the song Gunapadu Paavi Deva – குணப்படு பாவி தேவ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gunapadu Paavi Deva – குணப்படு பாவி தேவ PPT
Gunapadu Paavi Deva PPT

நம்பாதே பாவி மனம் குணப்படு தேவ கோபம் மேவி இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக சரணங்கள் New Version வேதத்தில் தனை தமிழ்