Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Enaimarakkade - தேவா எனைமறக்காதே இந்தச்

தேவா எனைமறக்காதே – இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

வானுலகோர்தொழும் நாதர் -இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா
காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

பாவியின் மேலிரங்கையா – பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

என்மீறுதல் நினையாதே எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே
உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்

நெருக்கப்படுகிறேன் தேவா – என்னை
உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா
இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

சரணம் சரணம் சருவேசா – இந்தத்
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

Deva Enaimarakkade Lyrics in English

Thaevaa enaimarakkaathae – inthach siriyan padunthuyaril thooranirkaathaenaeyaa unaiyanti neesanukkaar kathi thooyaa kirupaikoor naan makaathoshivaanulakortholum naathar -intha maanidarkaraiyaera vanthasakaayaa kaalaimaalaikal thoraுm karainthu urukukinta karmasanndaalanaik kannnnokka laakaathaapaaviyin maelirangaiyaa – pollaap paathakanaikkaividaathae nalameyyaa thaarannithannil thavikkumivvaelaiyaith thaangiyaa thariththunthan thayaipuri aiyaaenmeeraுthal ninaiyaathae enthan ilamaiyin paavaththai manathilvaiyaathae unpaathanj sernthan uvan thaenunaiyatainthaen ninpaathanthaanae nilaiyaakakkanntaennerukkappadukiraேn thaevaa – ennai urukkamaayp paaraay kiristhaesunaathaa irakkam vaiththentanin kuraithannai neekku ennai aatkonndavaa Yesu sarvaesaasaranam saranam saruvaesaa – inthath tharunam tharunam untan karunnai koor naesaa maranavaelaiyilum naduththeervai thinaththilum maapaathakan enai ratchiyaay naathaa

PowerPoint Presentation Slides for the song Deva Enaimarakkade

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Enaimarakkade – தேவா எனைமறக்காதே இந்தச் PPT
Deva Enaimarakkade PPT

தேவா என்னை தருணம் எனைமறக்காதே இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதேநேயா உனையன்றி நீசனுக்கார் கதி தூயா கிருபைகூர் மகாதோஷிவானுலகோர்தொழும் நாதர் மானிடர்கரையேற வந்தசகாயா காலைமாலைகள் தோறும் தமிழ்