யோசுவா 15

fullscreen1 யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

fullscreen2 தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,

fullscreen3 தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

fullscreen4 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.

fullscreen5 கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,

fullscreen6 பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,

fullscreen7 அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

fullscreen8 அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

fullscreen9 அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

fullscreen10 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

fullscreen11 அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக்கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

fullscreen12 மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

fullscreen13 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

fullscreen14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

fullscreen15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

fullscreen16 கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

fullscreen17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

fullscreen18 அவன் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

fullscreen19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

fullscreen20 யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:

fullscreen21 கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

fullscreen22 கீனா, திமோனா, அதாதா,

fullscreen23 கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

fullscreen24 சீப், தேலெம், பெயாலோத்,

fullscreen25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,

fullscreen26 ஆமாம், சேமா, மொலாதா,

fullscreen27 ஆத்சார்கதா, எஸ்மோன், பெத்பாலேத்,

fullscreen28 ஆத்சார்கவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,

fullscreen29 பாலா, ஈயிம், ஆத்சேம்,

fullscreen30 எல்தோலாத், கெசீல், ஒர்மா,

fullscreen31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,

fullscreen32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

fullscreen33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,

fullscreen34 சனோகா, என்கன்னீம், தப்புவா, எனாம்,

fullscreen35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

fullscreen36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு,

fullscreen37 சேனான், அதாஷா, மிக்தல்காத்,

fullscreen38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

fullscreen39 லாகீஸ், போஸ்காத், எக்லோன்,

fullscreen40 காபோன், லகமாம், கித்லீஷ்,

fullscreen41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.

fullscreen42 லிப்னா, எத்தேர், ஆஷான்,

fullscreen43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,

fullscreen44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

fullscreen45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,

fullscreen46 எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,

fullscreen47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.

fullscreen48 மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,

fullscreen49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,

fullscreen50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,

fullscreen51 கோசேன், ஓலோன்,கிலொ; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினொன்று.

fullscreen52 அராப், தூமா, எஷியான்,

fullscreen53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,

fullscreen54 உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

fullscreen55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

fullscreen56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,

fullscreen57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.

fullscreen58 அல்கூல், பெத்சூர், கெதோர்,

fullscreen59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

fullscreen60 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

fullscreen61 வனாந்தரத்தில், பெத்-அரபா, மித்தீன், செக்காக்கா,

fullscreen62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

fullscreen63 எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

1 But Job answered and said,

2 How hast thou helped him that is without power? how savest thou the arm that hath no strength?

3 How hast thou counselled him that hath no wisdom? and how hast thou plentifully declared the thing as it is?

4 To whom hast thou uttered words? and whose spirit came from thee?

5 Dead things are formed from under the waters, and the inhabitants thereof.

6 Hell is naked before him, and destruction hath no covering.

7 He stretcheth out the north over the empty place, and hangeth the earth upon nothing.

8 He bindeth up the waters in his thick clouds; and the cloud is not rent under them.

9 He holdeth back the face of his throne, and spreadeth his cloud upon it.

10 He hath compassed the waters with bounds, until the day and night come to an end.

11 The pillars of heaven tremble and are astonished at his reproof.

12 He divideth the sea with his power, and by his understanding he smiteth through the proud.

13 By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.

14 Lo, these are parts of his ways: but how little a portion is heard of him? but the thunder of his power who can understand?