புலம்பல் 2:18
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.
Tamil Indian Revised Version
அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.
Tamil Easy Reading Version
கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு! சீயோன் மகளின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு! இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே! உனது கண்ணின் கறுப்பு விழி சும்மா இருக்கும்படிச் செய்யாதே!
Thiru Viviliam
⁽அவர்களின் இதயம்␢ என் தலைவனை நோக்கிக்␢ கூக்குரலிடுகின்றது;␢ மகள் சீயோனின் மதிலே!␢ இரவும் பகலும் வெள்ளமெனக்␢ கண்ணீர் பொழி!␢ உனக்கு ஓய்வு வேண்டாம்!␢ கண்ணீர் விடாமல்␢ நீ இருக்க வேண்டாம்!⁾
King James Version (KJV)
Their heart cried unto the LORD, O wall of the daughter of Zion, let tears run down like a river day and night: give thyself no rest; let not the apple of thine eye cease.
American Standard Version (ASV)
Their heart cried unto the Lord: O wall of the daughter of Zion, let tears run down like a river day and night; Give thyself no respite; let not the apple of thine eye cease.
Bible in Basic English (BBE)
Let your cry go up to the Lord: O wall of the daughter of Zion, let your weeping be flowing down like a stream day and night; give yourself no rest, let not your eyes keep back the drops of sorrow.
Darby English Bible (DBY)
Their heart cried unto the Lord. O wall of the daughter of Zion, let tears run down like a torrent day and night: give thyself no respite; let not the apple of thine eye rest.
World English Bible (WEB)
Their heart cried to the Lord: wall of the daughter of Zion, let tears run down like a river day and night; Give yourself no respite; don’t let the apple of your eye cease.
Young’s Literal Translation (YLT)
Cried hath their heart unto the Lord; O wall of the daughter of Zion, Cause to go down as a stream tears daily and nightly, Give not rest to thyself, Let not the daughter of thine eye stand still.
புலம்பல் Lamentations 2:18
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.
Their heart cried unto the LORD, O wall of the daughter of Zion, let tears run down like a river day and night: give thyself no rest; let not the apple of thine eye cease.
| צָעַ֥ק | ṣāʿaq | tsa-AK | |
| לִבָּ֖ם | libbām | lee-BAHM | |
| אֶל | ʾel | el | |
| אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI | |
| חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT | |
| בַּת | bat | baht | |
| צִ֠יּוֹן | ṣiyyôn | TSEE-yone | |
| הוֹרִ֨ידִי | hôrîdî | hoh-REE-dee | |
| כַנַּ֤חַל | kannaḥal | ha-NA-hahl | |
| דִּמְעָה֙ | dimʿāh | deem-AH | |
| יוֹמָ֣ם | yômām | yoh-MAHM | |
| וָלַ֔יְלָה | wālaylâ | va-LA-la | |
| אַֽל | ʾal | al | |
| תִּתְּנִ֤י | tittĕnî | tee-teh-NEE | |
| פוּגַת֙ | pûgat | foo-ɡAHT | |
| לָ֔ךְ | lāk | lahk | |
| אַל | ʾal | al | |
| תִּדֹּ֖ם | tiddōm | tee-DOME | |
| בַּת | bat | baht | |
| עֵינֵֽךְ׃ | ʿênēk | ay-NAKE |
Cross Reference
புலம்பல் 2:8
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.
புலம்பல் 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
சங்கீதம் 119:145
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
ஆபகூக் 2:11
கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
ஓசியா 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
புலம்பல் 3:48
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
புலம்பல் 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
சங்கீதம் 119:136
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
எரேமியா 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 4:31
கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
ஏசாயா 26:16
கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத்தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.
Tags அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது சீயோன் குமாரத்தியின் மதிலே இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு ஓய்ந்திராதே உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே
Lamentations 2:18 in Tamil Concordance Lamentations 2:18 in Tamil Interlinear Lamentations 2:18 in Tamil Image