Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:1 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:1

நியாயாதிபதிகள் 8:1
அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம் கோபப்பட்டனர். எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனைச் சந்தித்தபோது, அவர்கள், “ஏன் எங்களை இப்படி நடத்தினீர்கள்? மீதியானியரை எதிர்த்து நீங்கள் போராடச் சென்றபோது ஏன் எங்களை அழைக்கவில்லை?” என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், “என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!” என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.

Other Title
மிதியானியர் முற்றும் அழிவுறுதல்

Judges 8Judges 8:2

King James Version (KJV)
And the men of Ephraim said unto him, Why hast thou served us thus, that thou calledst us not, when thou wentest to fight with the Midianites? And they did chide with him sharply.

American Standard Version (ASV)
And the men of Ephraim said unto him, Why hast thou served us thus, that thou calledst us not, when thou wentest to fight with Midian? And they did chide with him sharply.

Bible in Basic English (BBE)
And the men of Ephraim came and said to him, Why did you not send for us when you went to war against Midian? And they said sharp and angry words to him.

Darby English Bible (DBY)
And the men of E’phraim said to him, “What is this that you have done to us, not to call us when you went to fight with Mid’ian?” And they upbraided him violently.

Webster’s Bible (WBT)
And the men of Ephraim said to him, Why hast thou treated us thus, that thou calledst us not when thou wentest to fight with the Midianites? and they chid with him sharply.

World English Bible (WEB)
The men of Ephraim said to him, Why have you served us thus, that you didn’t call us, when you went to fight with Midian? They did chide with him sharply.

Young’s Literal Translation (YLT)
And the men of Ephraim say unto him, `What `is’ this thing thou hast done to us — not to call for us when thou didst go to fight with Midian?’ and they strive with him severely;

நியாயாதிபதிகள் Judges 8:1
அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
And the men of Ephraim said unto him, Why hast thou served us thus, that thou calledst us not, when thou wentest to fight with the Midianites? And they did chide with him sharply.

וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלָ֜יוʾēlāyway-LAV
אִ֣ישׁʾîšeesh
אֶפְרַ֗יִםʾeprayimef-RA-yeem
מָֽהma
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
הַזֶּה֙hazzehha-ZEH
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
לָּ֔נוּlānûLA-noo
לְבִלְתִּי֙lĕbiltiyleh-veel-TEE
קְרֹ֣אותqĕrōwtkeh-ROVE-t
לָ֔נוּlānûLA-noo
כִּ֥יkee
הָלַ֖כְתָּhālaktāha-LAHK-ta
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
בְּמִדְיָ֑ןbĕmidyānbeh-meed-YAHN
וַיְרִיב֥וּןwayrîbûnvai-ree-VOON
אִתּ֖וֹʾittôEE-toh
בְּחָזְקָֽה׃bĕḥozqâbeh-hoze-KA

Cross Reference

2 சாமுவேல் 19:41
இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.

நியாயாதிபதிகள் 12:1
எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.

யோபு 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

பிரசங்கி 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

யாக்கோபு 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?


Tags அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது எங்களை அழைப்பிக்கவில்லையே இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்
Judges 8:1 in Tamil Concordance Judges 8:1 in Tamil Interlinear Judges 8:1 in Tamil Image