Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 3:3 in Tamil

Home Bible Joshua Joshua 3 Joshua 3:3

யோசுவா 3:3
ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.

Tamil Indian Revised Version
மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஜனங்களிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியரும், லேவியரும் சுமந்து செல்வதைக் காண்பீர்கள். அப்போது, நீங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டும்.

Thiru Viviliam
மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.

Joshua 3:2Joshua 3Joshua 3:4

King James Version (KJV)
And they commanded the people, saying, When ye see the ark of the covenant of the LORD your God, and the priests the Levites bearing it, then ye shall remove from your place, and go after it.

American Standard Version (ASV)
and they commanded the people, saying, When ye see the ark of the covenant of Jehovah your God, and the priests the Levites bearing it, then ye shall remove from your place, and go after it.

Bible in Basic English (BBE)
Giving the people their orders, and saying, When you see the ark of the agreement of the Lord your God lifted up by the priests, the Levites, then get up from your places and go after it;

Darby English Bible (DBY)
and they commanded the people, saying, When ye see the ark of the covenant of Jehovah your God, and the priests the Levites bearing it, then remove from your place, and go after it;

Webster’s Bible (WBT)
And they commanded the people, saying, When ye see the ark of the covenant of the LORD your God, and the priests the Levites bearing it, then ye shall remove from your place, and go after it.

World English Bible (WEB)
and they commanded the people, saying, When you see the ark of the covenant of Yahweh your God, and the priests the Levites bearing it, then you shall remove from your place, and go after it.

Young’s Literal Translation (YLT)
and command the people, saying, `When ye see the ark of the covenant of Jehovah your God, and the priests, the Levites, bearing it, then ye journey from your place, and have gone after it;

யோசுவா Joshua 3:3
ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.
And they commanded the people, saying, When ye see the ark of the covenant of the LORD your God, and the priests the Levites bearing it, then ye shall remove from your place, and go after it.

וַיְצַוּוּ֮wayṣawwûvai-tsa-WOO
אֶתʾetet
הָעָ֣םhāʿāmha-AM
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
כִּרְאֹֽתְכֶ֗םkirʾōtĕkemkeer-oh-teh-HEM
אֵ֣תʾētate
אֲר֤וֹןʾărônuh-RONE
בְּרִיתbĕrîtbeh-REET
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹ֣הֵיכֶ֔םʾĕlōhêkemay-LOH-hay-HEM
וְהַכֹּֽהֲנִים֙wĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
הַלְוִיִּ֔םhalwiyyimhahl-vee-YEEM
נֹֽשְׂאִ֖יםnōśĕʾîmnoh-seh-EEM
אֹת֑וֹʾōtôoh-TOH
וְאַתֶּ֗םwĕʾattemveh-ah-TEM
תִּסְעוּ֙tisʿûtees-OO
מִמְּק֣וֹמְכֶ֔םmimmĕqômĕkemmee-meh-KOH-meh-HEM
וַֽהֲלַכְתֶּ֖םwahălaktemva-huh-lahk-TEM
אַֽחֲרָֽיו׃ʾaḥărāywAH-huh-RAIV

Cross Reference

உபாகமம் 31:9
மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,

யோசுவா 3:8
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.

உபாகமம் 31:25
மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:

எண்ணாகமம் 10:33
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

வெளிப்படுத்தின விசேஷம் 14:4
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

மத்தேயு 16:24
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மத்தேயு 8:19
அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

1 நாளாகமம் 15:11
பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,

2 சாமுவேல் 6:13
கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

2 சாமுவேல் 6:3
தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

யோசுவா 6:6
அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

யோசுவா 4:10
மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

யோசுவா 3:6
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.

எண்ணாகமம் 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.


Tags ஜனங்களை நோக்கி நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு அதற்குப் பின்செல்லுங்கள்
Joshua 3:3 in Tamil Concordance Joshua 3:3 in Tamil Interlinear Joshua 3:3 in Tamil Image