Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 7:29 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 7 Jeremiah 7:29

எரேமியா 7:29
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

Tamil Indian Revised Version
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த இடங்களில் புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது கோபத்திற்கு ஏதுவான சந்ததியை வெறுத்துத் தள்ளிவிட்டார்.

Tamil Easy Reading Version
“எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார்.

Thiru Viviliam
⁽உன் தலை முடியை மழித்து␢ எறிந்துவிடு;␢ மொட்டைக் குன்றுகளில் நின்று␢ ஒப்பாரி வை;␢ ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர்␢ இத்தலைமுறையைப்␢ புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.⁾⒫

Title
கொலையின் பள்ளத்தாக்கு

Other Title
இன்னோம் பள்ளத்தாக்கில் சிலை வழிபாடு

Jeremiah 7:28Jeremiah 7Jeremiah 7:30

King James Version (KJV)
Cut off thine hair, O Jerusalem, and cast it away, and take up a lamentation on high places; for the LORD hath rejected and forsaken the generation of his wrath.

American Standard Version (ASV)
Cut off thy hair, `O Jerusalem’, and cast it away, and take up a lamentation on the bare heights; for Jehovah hath rejected and forsaken the generation of his wrath.

Bible in Basic English (BBE)
Let your hair be cut off, O Jerusalem, and let it go, and let a song of grief go up on the open hilltops; for the Lord is turned away from the generation of his wrath and has given them up.

Darby English Bible (DBY)
Cut off thy hair, and cast it away, and take up a lamentation on the heights; for Jehovah hath rejected and forsaken the generation of his wrath.

World English Bible (WEB)
Cut off your hair, [Jerusalem], and cast it away, and take up a lamentation on the bare heights; for Yahweh has rejected and forsaken the generation of his wrath.

Young’s Literal Translation (YLT)
Cut off thy crown, and cast `it’ away, And lift up on high places lamentation, For Jehovah hath rejected, And He leaveth the generation of His wrath.

எரேமியா Jeremiah 7:29
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.
Cut off thine hair, O Jerusalem, and cast it away, and take up a lamentation on high places; for the LORD hath rejected and forsaken the generation of his wrath.

גָּזִּ֤יgozzîɡoh-ZEE
נִזְרֵךְ֙nizrēkneez-rake
וְֽהַשְׁלִ֔יכִיwĕhašlîkîveh-hahsh-LEE-hee
וּשְׂאִ֥יûśĕʾîoo-seh-EE
עַלʿalal
שְׁפָיִ֖םšĕpāyimsheh-fa-YEEM
קִינָ֑הqînâkee-NA
כִּ֚יkee
מָאַ֣סmāʾasma-AS
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיִּטֹּ֖שׁwayyiṭṭōšva-yee-TOHSH
אֶתʾetet
דּ֥וֹרdôrdore
עֶבְרָתֽוֹ׃ʿebrātôev-ra-TOH

Cross Reference

யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

மீகா 1:16
உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

எரேமியா 6:30
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.

எரேமியா 16:6
இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

மத்தேயு 23:36
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 16:4
இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

மத்தேயு 12:39
அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

மத்தேயு 3:7
பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

சகரியா 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

எசேக்கியேல் 28:12
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

எசேக்கியேல் 19:1
நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,

எரேமியா 48:37
தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.

எரேமியா 47:5
காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்..

எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

2 இராஜாக்கள் 17:20
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

உபாகமம் 32:5
அவர்களே தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.


Tags நீ உன் தலைமயிரைச் சிரைத்து எறிந்துவிட்டு உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்
Jeremiah 7:29 in Tamil Concordance Jeremiah 7:29 in Tamil Interlinear Jeremiah 7:29 in Tamil Image