Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 46:28 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 46 Jeremiah 46:28

எரேமியா 46:28
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

Tamil Indian Revised Version
என் ஊழியனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லாத் தேசங்களையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் அழிக்காமல், உன்னைக் குறைவாகத் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னைத் தண்டிக்காமலிருந்தால் நான் குற்றமுள்ளவனாவேன் என்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் இவற்றைக் கூறுகிறார், “யாக்கோபே, என் வேலைக்காரனே! பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவேன். ஆனால் உன்னை நான் முழுவதுமாக அழிக்கமாட்டேன். ஆனால் அந்த நாடுகளை எல்லாம் அழிப்பேன். நீ செய்த தீயச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். எனவே நான் உன்னைத் தண்டனையிலிருந்து தப்பிக்கும்படி விடமாட்டேன். நான் உன்னை ஒழுங்குப்படுத்துவேன் ஆனால் நான் நியாயமாக இருப்பேன்.”

Thiru Viviliam
⁽என் ஊழியன் யாக்கோபே,␢ அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்.␢ நான் உன்னோடு இருக்கிறேன்;␢ எந்த மக்களினத்தாரிடையே␢ உன்னைத் துரத்தியடித்தேனோ,␢ அவர்கள் அனைவரையும்␢ முற்றிலும் அழித்தொழிப்பேன்;␢ உன்னையோ␢ முற்றிலும் அழிக்க மாட்டேன்;␢ உன்னை நீதியோடு தண்டிப்பேன்;␢ உன்னை எவ்வகையிலேனும்␢ தண்டியாது விடேன்.⁾

Jeremiah 46:27Jeremiah 46

King James Version (KJV)
Fear thou not, O Jacob my servant, saith the LORD: for I am with thee; for I will make a full end of all the nations whither I have driven thee: but I will not make a full end of thee, but correct thee in measure; yet will I not leave thee wholly unpunished.

American Standard Version (ASV)
Fear not thou, O Jacob my servant, saith Jehovah; for I am with thee: for I will make a full end of all the nations whither I have driven thee; but I will not make a full end of thee, but I will correct thee in measure, and will in no wise leave thee unpunished.

Bible in Basic English (BBE)
Have no fear, O Jacob, my servant, says the Lord; for I am with you: for I will put an end to all the nations where I have sent you, but I will not put an end to you completely: though with wise purpose I will put right your errors, and will not let you go quite without punishment.

Darby English Bible (DBY)
Fear thou not, my servant Jacob, saith Jehovah: for I am with thee; for I will make a full end of all the nations whither I have driven thee, but I will not make a full end of thee; but I will correct thee with judgment, and I will not hold thee altogether guiltless.

World English Bible (WEB)
Don’t be afraid you, O Jacob my servant, says Yahweh; for I am with you: for I will make a full end of all the nations where I have driven you; but I will not make a full end of you, but I will correct you in measure, and will in no way leave you unpunished.

Young’s Literal Translation (YLT)
Thou, thou dost not fear, My servant Jacob, An affirmation of Jehovah — for with thee I `am’, For I make an end of all the nations Whither I have driven thee, And of thee I do not make an end, And I have reproved thee in judgment, And do not entirely acquit thee!’

எரேமியா Jeremiah 46:28
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
Fear thou not, O Jacob my servant, saith the LORD: for I am with thee; for I will make a full end of all the nations whither I have driven thee: but I will not make a full end of thee, but correct thee in measure; yet will I not leave thee wholly unpunished.

אַ֠תָּהʾattâAH-ta
אַלʾalal
תִּירָ֞אtîrāʾtee-RA
עַבְדִּ֤יʿabdîav-DEE
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֥יkee
אִתְּךָ֖ʾittĕkāee-teh-HA
אָ֑נִיʾānîAH-nee
כִּי֩kiykee
אֶעֱשֶׂ֨הʾeʿĕśeeh-ay-SEH
כָלָ֜הkālâha-LA
בְּכָֽלbĕkālbeh-HAHL
הַגּוֹיִ֣ם׀haggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
הִדַּחְתִּ֣יךָhiddaḥtîkāhee-dahk-TEE-ha
שָׁ֗מָּהšāmmâSHA-ma
וְאֹֽתְךָ֙wĕʾōtĕkāveh-oh-teh-HA
לֹאlōʾloh
אֶעֱשֶׂ֣הʾeʿĕśeeh-ay-SEH
כָלָ֔הkālâha-LA
וְיִסַּרְתִּ֙יךָ֙wĕyissartîkāveh-yee-sahr-TEE-HA
לַמִּשְׁפָּ֔טlammišpāṭla-meesh-PAHT
וְנַקֵּ֖הwĕnaqqēveh-na-KAY
לֹ֥אlōʾloh
אֲנַקֶּֽךָּ׃ʾănaqqekkāuh-na-KEH-ka

Cross Reference

எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

எரேமியா 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

எரேமியா 4:27
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 46:7
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

சங்கீதம் 46:11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

ஏசாயா 8:9
ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

எரேமியா 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 9:8
கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

1 கொரிந்தியர் 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

மத்தேயு 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

தானியேல் 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

எரேமியா 33:24
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

எரேமியா 32:42
நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

யோசுவா 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

ஏசாயா 27:7
அவர் அவனை அடித்தவர்களை அடித்தபோல அவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?

ஏசாயா 27:9
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 45:23
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

எரேமியா 5:10
அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.

எரேமியா 5:18
ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

எரேமியா 15:20
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ரோமர் 11:15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:10
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


Tags என் தாசனாகிய யாக்கோபே நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் உன்னுடனே இருக்கிறேன் உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன் உன்னையோ நான் நிர்மூலமாக்காமல் உன்னை மட்டாய் தண்டிப்பேன் ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்
Jeremiah 46:28 in Tamil Concordance Jeremiah 46:28 in Tamil Interlinear Jeremiah 46:28 in Tamil Image