எரேமியா 4:2
நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
Tamil Indian Revised Version
நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
Tamil Easy Reading Version
நீ அவற்றைச் செய்தால், பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய், ‘கர்த்தர் வாழ்கிறதுபோல’ என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய். அந்த வார்த்தைகளை உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்: நீ இவற்றைச் செய்தால், பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும். அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி, மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thiru Viviliam
⁽வாழும் ஆண்டவர் மேல் ஆணை␢ என்று சொல்லி␢ உண்மையோடும் நீதியோடும்␢ நேர்மையோடும் ஆணையிட்டால்,␢ மக்களினத்தார் அவர் வழியாகத்␢ தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்;␢ அவரில் பெருமை பாராட்டுவர்..⁾
King James Version (KJV)
And thou shalt swear, The LORD liveth, in truth, in judgment, and in righteousness; and the nations shall bless themselves in him, and in him shall they glory.
American Standard Version (ASV)
and thou shalt swear, As Jehovah liveth, in truth, in justice, and in righteousness; and the nations shall bless themselves in him, and in him shall they glory.
Bible in Basic English (BBE)
And you will take your oath, By the living Lord, in good faith and wisdom and righteousness; and the nations will make use of you as a blessing, and in you will they take a pride.
Darby English Bible (DBY)
— and thou shalt in truth, in justice, and in righteousness swear, [As] Jehovah liveth! and the nations shall bless themselves in him, and in him shall they glory.
World English Bible (WEB)
and you shall swear, As Yahweh lives, in truth, in justice, and in righteousness; and the nations shall bless themselves in him, and in him shall they glory.
Young’s Literal Translation (YLT)
And thou hast sworn — Jehovah liveth, In truth, in judgment, and in righteousness, And blessed themselves in Him have nations, And in Him they boast themselves.
எரேமியா Jeremiah 4:2
நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
And thou shalt swear, The LORD liveth, in truth, in judgment, and in righteousness; and the nations shall bless themselves in him, and in him shall they glory.
| וְנִשְׁבַּ֙עְתָּ֙ | wĕnišbaʿtā | veh-neesh-BA-TA | |
| חַי | ḥay | hai | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| בֶּאֱמֶ֖ת | beʾĕmet | beh-ay-MET | |
| בְּמִשְׁפָּ֣ט | bĕmišpāṭ | beh-meesh-PAHT | |
| וּבִצְדָקָ֑ה | ûbiṣdāqâ | oo-veets-da-KA | |
| וְהִתְבָּ֥רְכוּ | wĕhitbārĕkû | veh-heet-BA-reh-hoo | |
| ב֛וֹ | bô | voh | |
| גּוֹיִ֖ם | gôyim | ɡoh-YEEM | |
| וּב֥וֹ | ûbô | oo-VOH | |
| יִתְהַלָּֽלוּ׃ | yithallālû | yeet-ha-la-LOO |
Cross Reference
ஏசாயா 65:16
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.
எரேமியா 9:24
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கலாத்தியர் 3:8
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
1 கொரிந்தியர் 1:31
அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
உபாகமம் 10:20
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
ஆதியாகமம் 22:18
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
2 கொரிந்தியர் 10:17
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
எரேமியா 12:16
அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.
ஏசாயா 45:25
இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.
ஏசாயா 45:23
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
பிலிப்பியர் 3:3
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
சகரியா 8:8
அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஓசியா 2:19
நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
எரேமியா 5:2
அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
ஏசாயா 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
சங்கீதம் 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
சங்கீதம் 72:17
அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
1 இராஜாக்கள் 3:6
அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
Tags நீ உண்மையோடும் நியாயத்தோடும் நீதியோடும் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய் புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்
Jeremiah 4:2 in Tamil Concordance Jeremiah 4:2 in Tamil Interlinear Jeremiah 4:2 in Tamil Image