Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 59:7 in Tamil

Home Bible Isaiah Isaiah 59 Isaiah 59:7

ஏசாயா 59:7
அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தம் கால்களைத் தீமைசெய்ய ஓடுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குற்றம் ஒன்றுமே செய்யாதவர்களைக் கொலை செய்ய விரைவார்கள். அவர்கள் தீய எண்ணங்களைச் சிந்திப்பார்கள். கலகமும் கொள்ளையும் அவர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது.

Thiru Viviliam
⁽தீமை செய்ய அவர்கள் கால்கள்␢ விரைகின்றன;␢ குற்றமற்ற இரத்தம் சிந்த␢ அவர்கள் துடிக்கின்றனர்;␢ அவர்கள் எண்ணங்கள் தீயவை;␢ பாழாக்குதலும் அழிவுமே␢ அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.⁾

Isaiah 59:6Isaiah 59Isaiah 59:8

King James Version (KJV)
Their feet run to evil, and they make haste to shed innocent blood: their thoughts are thoughts of iniquity; wasting and destruction are in their paths.

American Standard Version (ASV)
Their feet run to evil, and they make haste to shed innocent blood: their thoughts are thoughts of iniquity; desolation and destruction are in their paths.

Bible in Basic English (BBE)
Their feet go quickly to evil, and they take delight in the death of the upright; their thoughts are thoughts of sin; wasting and destruction are in their ways.

Darby English Bible (DBY)
Their feet run to evil, and they make haste to shed innocent blood; their thoughts are thoughts of iniquity; wasting and destruction are in their paths;

World English Bible (WEB)
Their feet run to evil, and they make haste to shed innocent blood: their thoughts are thoughts of iniquity; desolation and destruction are in their paths.

Young’s Literal Translation (YLT)
Their feet to evil do run, And they haste to shed innocent blood, Their thoughts `are’ thoughts of iniquity, Spoiling and destruction `are’ in their highways.

ஏசாயா Isaiah 59:7
அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.
Their feet run to evil, and they make haste to shed innocent blood: their thoughts are thoughts of iniquity; wasting and destruction are in their paths.

רַגְלֵיהֶם֙raglêhemrahɡ-lay-HEM
לָרַ֣עlāraʿla-RA
יָרֻ֔צוּyāruṣûya-ROO-tsoo
וִֽימַהֲר֔וּwîmahărûvee-ma-huh-ROO
לִשְׁפֹּ֖ךְlišpōkleesh-POKE
דָּ֣םdāmdahm
נָקִ֑יnāqîna-KEE
מַחְשְׁבֹֽתֵיהֶם֙maḥšĕbōtêhemmahk-sheh-voh-tay-HEM
מַחְשְׁב֣וֹתmaḥšĕbôtmahk-sheh-VOTE
אָ֔וֶןʾāwenAH-ven
שֹׁ֥דšōdshode
וָשֶׁ֖בֶרwāšeberva-SHEH-ver
בִּמְסִלּוֹתָֽם׃bimsillôtāmbeem-see-loh-TAHM

Cross Reference

ரோமர் 3:15
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;

மாற்கு 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

நீதிமொழிகள் 6:17
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

நீதிமொழிகள் 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:6
அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:20
பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,

மத்தேயு 23:31
ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

எசேக்கியேல் 22:6
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

எசேக்கியேல் 9:9
அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

புலம்பல் 4:13
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

எரேமியா 22:17
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

ஏசாயா 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

ஏசாயா 59:3
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

நீதிமொழிகள் 24:9
தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

நீதிமொழிகள் 15:26
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.


Tags அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள் பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது
Isaiah 59:7 in Tamil Concordance Isaiah 59:7 in Tamil Interlinear Isaiah 59:7 in Tamil Image