ஏசாயா 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
Tamil Indian Revised Version
கர்த்தர் எப்பொழுதும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை பெலமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
Tamil Easy Reading Version
கர்த்தர் எப்பொழுதும் உன்னை வழிநடத்துவார். வறண்ட நிலங்களில் அவர் உனது ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவார். உனது எலும்புகளுக்குக் கர்த்தர் பெலன் தருவார். அதிகத் தண்ணீருள்ள தோட்டத்தைப்போன்று நீ இருப்பாய். எப்பொழுதும் தண்ணீருள்ள ஊற்றினைப்போன்று நீ இருப்பாய்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் தொடர்ந்து␢ உன்னை வழிநடத்துவார்;␢ வறண்ட சூழலில்␢ உனக்கு நிறைவளிப்பார்;␢ உன் எலும்புகளை வலிமையாக்குவார்;␢ நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும்,␢ ஒருபோதும் வற்றாத␢ நீரூற்றுபோலும் இருப்பாய்.⁾
King James Version (KJV)
And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.
American Standard Version (ASV)
and Jehovah will guide thee continually, and satisfy thy soul in dry places, and make strong thy bones; and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.
Bible in Basic English (BBE)
And the Lord will be your guide at all times; in dry places he will give you water in full measure, and will make strong your bones; and you will be like a watered garden, and like an ever-flowing spring.
Darby English Bible (DBY)
and Jehovah will guide thee continually, and satisfy thy soul in drought, and strengthen thy bones; and thou shalt be like a watered garden, and like a water-spring, whose waters deceive not.
World English Bible (WEB)
and Yahweh will guide you continually, and satisfy your soul in dry places, and make strong your bones; and you shall be like a watered garden, and like a spring of water, whose waters don’t fail.
Young’s Literal Translation (YLT)
And Jehovah doth lead thee continually, And hath satisfied in drought thy soul, And thy bones He armeth, And thou hast been as a watered garden, And as an outlet of waters, whose waters lie not.
ஏசாயா Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.
| וְנָחֲךָ֣ | wĕnāḥăkā | veh-na-huh-HA | |
| יְהוָה֮ | yĕhwāh | yeh-VA | |
| תָּמִיד֒ | tāmîd | ta-MEED | |
| וְהִשְׂבִּ֤יעַ | wĕhiśbîaʿ | veh-hees-BEE-ah | |
| בְּצַחְצָחוֹת֙ | bĕṣaḥṣāḥôt | beh-tsahk-tsa-HOTE | |
| נַפְשֶׁ֔ךָ | napšekā | nahf-SHEH-ha | |
| וְעַצְמֹתֶ֖יךָ | wĕʿaṣmōtêkā | veh-ats-moh-TAY-ha | |
| יַחֲלִ֑יץ | yaḥălîṣ | ya-huh-LEETS | |
| וְהָיִ֙יתָ֙ | wĕhāyîtā | veh-ha-YEE-TA | |
| כְּגַ֣ן | kĕgan | keh-ɡAHN | |
| רָוֶ֔ה | rāwe | ra-VEH | |
| וּכְמוֹצָ֣א | ûkĕmôṣāʾ | oo-heh-moh-TSA | |
| מַ֔יִם | mayim | MA-yeem | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לֹא | lōʾ | loh | |
| יְכַזְּב֖וּ | yĕkazzĕbû | yeh-ha-zeh-VOO | |
| מֵימָֽיו׃ | mêmāyw | may-MAIV |
Cross Reference
எரேமியா 31:12
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
யோவான் 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
ஓசியா 13:5
நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.
ஏசாயா 49:10
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
நீதிமொழிகள் 11:25
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
சங்கீதம் 107:9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
நீதிமொழிகள் 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
நீதிமொழிகள் 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
உன்னதப்பாட்டு 4:15
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
எரேமியா 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
எசேக்கியேல் 36:35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
நீதிமொழிகள் 3:8
அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
சங்கீதம் 92:14
கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
சங்கீதம் 48:14
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
யோபு 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
சங்கீதம் 33:19
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
சங்கீதம் 34:9
கர்த்தருடைய பரிசுத்தவான்களே அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
சங்கீதம் 37:19
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
ஏசாயா 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
ஏசாயா 61:11
பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.
1 தெசலோனிக்கேயர் 3:11
நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
யோபு 5:20
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
Tags கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார் நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்
Isaiah 58:11 in Tamil Concordance Isaiah 58:11 in Tamil Interlinear Isaiah 58:11 in Tamil Image