ஏசாயா 50:6
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
Tamil Indian Revised Version
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் என்னை அடிக்கும்படிவிடுவேன். எனது தாடியில் உள்ள மயிரைப் பிடித்து அவர்கள் இழுக்கும்படிவிடுவேன். அவர்கள் என்னைப்பற்றி கெட்டதாகப் பேசி என் மீது துப்பும்போது நான் எனது முகத்தை மறைக்கமாட்டேன்.
Thiru Viviliam
⁽அடிப்போர்க்கு என் முதுகையும்,␢ தாடியைப் பிடுங்குவோர்க்கு␢ என் தாடையையும் ஒப்புவித்தேன்.␢ நிந்தனை செய்வோர்க்கும்␢ காறி உமிழ்வோர்க்கும்␢ என் முகத்தை மறைக்கவில்லை.⁾
King James Version (KJV)
I gave my back to the smiters, and my cheeks to them that plucked off the hair: I hid not my face from shame and spitting.
American Standard Version (ASV)
I gave my back to the smiters, and my cheeks to them that plucked off the hair; I hid not my face from shame and spitting.
Bible in Basic English (BBE)
I was offering my back to those who gave me blows, and my face to those who were pulling out my hair: I did not keep my face covered from marks of shame.
Darby English Bible (DBY)
I gave my back to smiters, and my cheeks to them that plucked off the hair; I hid not my face from shame and spitting.
World English Bible (WEB)
I gave my back to the strikers, and my cheeks to those who plucked off the hair; I didn’t hide my face from shame and spitting.
Young’s Literal Translation (YLT)
My back I have given to those smiting, And my cheeks to those plucking out, My face I hid not from shame and spitting.
ஏசாயா Isaiah 50:6
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
I gave my back to the smiters, and my cheeks to them that plucked off the hair: I hid not my face from shame and spitting.
| גֵּוִי֙ | gēwiy | ɡay-VEE | |
| נָתַ֣תִּי | nātattî | na-TA-tee | |
| לְמַכִּ֔ים | lĕmakkîm | leh-ma-KEEM | |
| וּלְחָיַ֖י | ûlĕḥāyay | oo-leh-ha-YAI | |
| לְמֹֽרְטִ֑ים | lĕmōrĕṭîm | leh-moh-reh-TEEM | |
| פָּנַי֙ | pānay | pa-NA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| הִסְתַּ֔רְתִּי | histartî | hees-TAHR-tee | |
| מִכְּלִמּ֖וֹת | mikkĕlimmôt | mee-keh-LEE-mote | |
| וָרֹֽק׃ | wārōq | va-ROKE |
Cross Reference
மத்தேயு 26:67
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
மாற்கு 15:19
அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
மாற்கு 14:65
அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
மத்தேயு 27:30
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
யோவான் 18:22
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
லுூக்கா 22:63
இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
மத்தேயு 27:26
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
நெகேமியா 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
மீகா 5:1
சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
புலம்பல் 3:30
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
மத்தேயு 5:39
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
Tags அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும் தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன் அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை
Isaiah 50:6 in Tamil Concordance Isaiah 50:6 in Tamil Interlinear Isaiah 50:6 in Tamil Image