ஏசாயா 44:1
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
Tamil Indian Revised Version
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
Tamil Easy Reading Version
“யாக்கோபே, நீ எனது தாசன், என்னைக் கவனி! இஸ்ரவேலே, நான் உன்னைத் தேர்ந் தெடுக்கிறேன். நான் சொல்வதைக் கேள்.
Thiru Viviliam
⁽என் ஊழியன் யாக்கோபே,␢ நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே,␢ இப்பொழுது செவிகொடு.⁾
Other Title
ஆண்டவர் ஒருவரே கடவுள்
King James Version (KJV)
Yet now hear, O Jacob my servant; and Israel, whom I have chosen:
American Standard Version (ASV)
Yet now hear, O Jacob my servant, and Israel, who I have chosen:
Bible in Basic English (BBE)
And now, give ear, O Jacob my servant, and Israel whom I have taken for myself:
Darby English Bible (DBY)
And now hear, Jacob, my servant, and Israel, whom I have chosen:
World English Bible (WEB)
Yet now hear, Jacob my servant, and Israel, who I have chosen:
Young’s Literal Translation (YLT)
And now, hear, O Jacob, My servant, And Israel, whom I have fixed on:
ஏசாயா Isaiah 44:1
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
Yet now hear, O Jacob my servant; and Israel, whom I have chosen:
| וְעַתָּ֥ה | wĕʿattâ | veh-ah-TA | |
| שְׁמַ֖ע | šĕmaʿ | sheh-MA | |
| יַעֲקֹ֣ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| עַבְדִּ֑י | ʿabdî | av-DEE | |
| וְיִשְׂרָאֵ֖ל | wĕyiśrāʾēl | veh-yees-ra-ALE | |
| בָּחַ֥רְתִּי | bāḥartî | ba-HAHR-tee | |
| בֽוֹ׃ | bô | voh |
Cross Reference
எரேமியா 30:10
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
ஏசாயா 41:8
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,
எரேமியா 46:27
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
எபிரெயர் 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,
ரோமர் 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
லுூக்கா 13:34
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா 48:16
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
ஏசாயா 43:1
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
ஏசாயா 42:23
உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக்கேட்கிறவன் யார்?
சங்கீதம் 105:42
அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
சங்கீதம் 105:6
அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
சங்கீதம் 81:11
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
உபாகமம் 7:6
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்.
ஆதியாகமம் 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
Tags இப்போதும் என் தாசனாகிய யாக்கோபே நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே கேள்
Isaiah 44:1 in Tamil Concordance Isaiah 44:1 in Tamil Interlinear Isaiah 44:1 in Tamil Image