Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 31:3 in Tamil

Home Bible Isaiah Isaiah 31 Isaiah 31:3

ஏசாயா 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்தியர்கள் தெய்வம் அல்ல, மனிதர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது உதவி செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாக அழிந்துபோவார்கள்.

Tamil Easy Reading Version
எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.

Thiru Viviliam
⁽எகிப்தியர் வெறும் மனிதரே,␢ இறைவன் அல்லர்;␢ அவர்கள் குதிரைகள் வெறும்␢ தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;␢ ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது␢ உதவி செய்பவன் இடறுவான்;␢ உதவி பெறுபவன் வீழ்வான்;␢ அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.⁾

Isaiah 31:2Isaiah 31Isaiah 31:4

King James Version (KJV)
Now the Egyptians are men, and not God; and their horses flesh, and not spirit. When the LORD shall stretch out his hand, both he that helpeth shall fall, and he that is holpen shall fall down, and they all shall fail together.

American Standard Version (ASV)
Now the Egyptians are men, and not God; and their horses flesh, and not spirit: and when Jehovah shall stretch out his hand, both he that helpeth shall stumble, and he that is helped shall fall, and they all shall be consumed together.

Bible in Basic English (BBE)
For the Egyptians are men, and not God; and their horses are flesh, and not spirit: and when the Lord’s hand is stretched out, the helper and he who is helped will come down together.

Darby English Bible (DBY)
And the Egyptians are men, and not ùGod, and their horses flesh, and not spirit; and Jehovah shall stretch forth his hand, and he that helpeth shall stumble, and he that is helped shall fall, and they all shall perish together.

World English Bible (WEB)
Now the Egyptians are men, and not God; and their horses flesh, and not spirit: and when Yahweh shall stretch out his hand, both he who helps shall stumble, and he who is helped shall fall, and they all shall be consumed together.

Young’s Literal Translation (YLT)
And the Egyptians `are men’, and not God, And their horses `are’ flesh, and not spirit, And Jehovah stretcheth out His hand, And stumbled hath the helper, And fallen hath the helped one, And together all of them are consumed.

ஏசாயா Isaiah 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
Now the Egyptians are men, and not God; and their horses flesh, and not spirit. When the LORD shall stretch out his hand, both he that helpeth shall fall, and he that is holpen shall fall down, and they all shall fail together.

וּמִצְרַ֤יִםûmiṣrayimoo-meets-RA-yeem
אָדָם֙ʾādāmah-DAHM
וְֽלֹאwĕlōʾVEH-loh
אֵ֔לʾēlale
וְסוּסֵיהֶ֥םwĕsûsêhemveh-soo-say-HEM
בָּשָׂ֖רbāśārba-SAHR
וְלֹאwĕlōʾveh-LOH
ר֑וּחַrûaḥROO-ak
וַֽיהוָ֞הwayhwâvai-VA
יַטֶּ֣הyaṭṭeya-TEH
יָד֗וֹyādôya-DOH
וְכָשַׁ֤לwĕkāšalveh-ha-SHAHL
עוֹזֵר֙ʿôzēroh-ZARE
וְנָפַ֣לwĕnāpalveh-na-FAHL
עָזֻ֔רʿāzurah-ZOOR
וְיַחְדָּ֖וwĕyaḥdāwveh-yahk-DAHV
כֻּלָּ֥םkullāmkoo-LAHM
יִכְלָיֽוּן׃yiklāywwnyeek-LAI-wn

Cross Reference

ஏசாயா 9:17
ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

எசேக்கியேல் 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,

எசேக்கியேல் 20:33
பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும் ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

எரேமியா 15:6
நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 தெசலோனிக்கேயர் 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.

எரேமியா 37:7
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.

ஏசாயா 36:9
கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

ஏசாயா 36:6
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

ஏசாயா 30:7
எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.

ஏசாயா 30:5
ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

சங்கீதம் 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.

சங்கீதம் 33:17
இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

சங்கீதம் 9:20
ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)

உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?


Tags எகிப்தியர் தெய்வம் அல்ல மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல மாம்சந்தானே கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார் அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி சகாயம் பெறுகிறவனும் விழுந்து அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்
Isaiah 31:3 in Tamil Concordance Isaiah 31:3 in Tamil Interlinear Isaiah 31:3 in Tamil Image