1 ⁽ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:␢ “இஸ்ரயேல் மக்கள் வேற்றுத்␢ தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு,␢ உயர்ந்த திராட்சை அடைகளை* § விரும்புகின்றனர்.␢ எனினும் அவர்கள்மேல்␢ ஆண்டவர் அன்பு வைத்துள்ளார்.␢ இதற்கு அடையாளமாக␢ நீ மறுபடியும் போய்,␢ வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் § விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல்␢ காதல் கொள்.”⁾

2 ⁽அவ்வாறே நான் அவளைப்␢ பதினைந்து வெள்ளிக்காசுகளையும்*␢ ஒன்றரை கலம்** அளவுள்ள␢ வாற்கோதுமையும் கொடுத்து␢ எனக்கென வாங்கிக்கொண்டேன்.⁾

3 ⁽பின்பு நான் அவளை நோக்கி,␢ ‘நீ வேசித்தொழில் புரியாமலும்␢ வேறொருவனுக்கு உடைமையாகாமலும்,␢ நெடுநாள் எனக்கே உரியவளாய்␢ வாழவேண்டும்.␢ நானும் அவ்வண்ணமே␢ உனக்காக வாழ்வேன்’ என்றேன்.⁾

4 ⁽இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள்␢ அரசனின்றி, தலைவனின்றி,␢ பலியின்றி, பலி பீடமின்றி,␢ குருத்துவ உடையின்றி,␢ குலதெய்வச் சிலைகளுமின்றி␢ இருப்பார்கள்.⁾

5 ⁽அதற்குப் பிறகு,␢ இஸ்ரயேல் மக்கள்␢ தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும்␢ தங்கள் அரசனாகிய தாவீதையும்␢ தேடி வருவார்கள்;␢ இறுதி நாள்களில் ஆண்டவரையும்␢ அவர்தம் நன்மைகளையும் நாடி § நடுக்கத்தோடு வருவார்கள்.⁾

Hosea 3 ERV IRV TRV