1 ‘அம்மீ’* என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். ‘ருகாமா’ என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

2 ⁽“வழக்காடுங்கள், உங்கள்␢ அன்னையோடு வழக்காடுங்கள்;␢ அவள் எனக்கு மனைவியுமல்ல;␢ நான் அவளுக்குக் கணவனுமல்ல;␢ அவள் வேசித்தனத்தின் குறிகளைத்␢ தன் முகத்தி னின்றும்,␢ விபசார குறிகளைத்␢ தன் மார்பினின்றும் அகற்றட்டும்.⁾

3 ⁽இல்லாவிடில், நான் அவளைத்␢ துகிலுரித்து திறந்தமேனியாக்குவேன்;␢ பிறந்த நாளில் இருந்த கோலமாய்␢ அவளை ஆக்குவேன்;␢ பாலைநிலம்போல் ஆக்கி,␢ வறண்ட நிலமாகச்செய்து␢ தாகத்தினால் அவளைச் சாகடிப்பேன்.⁾

4 ⁽அவள் பிள்ளைகளுக்கும்␢ நான் கருணை காட்டமாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.⁾

5 ⁽அவர்களின் தாய்␢ வேசியாய் வாழ்ந்தாள்;␢ அவர்களைக் கருத்தாங்கியவள்␢ ஒழுக்கம் கெட்டு நடந்தாள்;␢ ‘எனக்கு உணவும் தண்ணீரும்,␢ ஆட்டு மயிரும் சணலும்,␢ எண்ணெயும் பானமும் தருகின்ற␢ என் காதலரைப்␢ பின் செல்வேன்’ என்றாள்.⁾

6 ⁽ஆதலால், நான் அவள்*␢ வழியை முள்ளால் அடைப்பேன்;␢ அவள் எதிரில்␢ சுவர் ஒன்றை எழுப்புவேன்;␢ அவளால் வழி கண்டுபிடித்துப்␢ போக இயலாது.⁾

7 ⁽அவள் தன் காதலர்களைப்␢ பின்தொடர்ந்து ஓடுவாள்;␢ ஆனால் அவர்களிடம்␢ போய்ச் சேரமாட்டாள்.␢ அவர்களைத் தேடித் திரிவாள்;␢ ஆனால், அவர்களைக் காணமாட்டாள்.␢ அப்போது அவள், ‘என் முதல்␢ கணவனிடமே நான்␢ திரும்பிப் போவேன்;␢ இப்போது இருப்பதைவிட,␢ அப்போது எனக்கு␢ நன்றாயிருந்தது’ என்பாள்.⁾

8 ⁽கோதுமையும் திராட்சை இரசமும்␢ எண்ணெயும் அவளுக்குக்␢ கொடுத்தது நானே என்பதை␢ அவள் அறியவில்லை.␢ நான் வாரி வழங்கிய␢ பொன், வெள்ளியைக் கொண்டே␢ பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.⁾

9 ⁽ஆதலால், நான் எனது கோதுமையை␢ அதன் காலத்திலும்,␢ எனது திராட்சை இரசத்தை␢ அதன் பருவத்திலும்␢ திரும்ப எடுத்துக்கொள்வேன்;␢ அவள் திறந்த மேனியை மறைக்க␢ நான் கொடுத்திருந்த␢ கம்பளி ஆடையையும் சணலாடையையும்␢ பறித்துக் கொள்வேன்.⁾

10 ⁽இப்பொழுதே அவளுடைய␢ காதலர் கண்முன்␢ அவளது வெட்கக் கேட்டை␢ வெளிப்படுத்துவேன்;␢ என்னுடைய கையிலிருந்து␢ அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.⁾

11 ⁽அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும்␢ விழாக்களையும் அமாவாசைகளையும்␢ ஓய்வு நாளையும் அவளுடைய␢ திருநாள்கள் அனைத்தையுமே␢ ஒழித்துவிடுவேன்.⁾

12 ⁽‘இவை என் காதலர் எனக்குக்␢ கூலியாகக் கொடுத்தவை’ என்று␢ அவள் சொல்லிக் கொண்ட␢ அவளுடைய␢ திராட்சைத் தோட்டங்களையும்,␢ அத்தி மரங்களையும் பாழாக்குவேன்;␢ அவற்றைக் காடாக்கிவிடுவேன்;␢ காட்டு விலங்குகளுக்கு␢ அவை இரையாகும்.⁾

13 ⁽பாகால்களின் விழாக்களைக்␢ கொண்டாடிய நாள்களில்␢ அவள் அவற்றுக்கு␢ நறுமணப்புகை எழுப்பினாள்;␢ வளையல்களாலும் நகைகளாலும்␢ தன்னை அணி செய்து,␢ தன் காதலர்பின் போய்␢ என்னை மறந்தாள்;␢ இவற்றுக்காக அவளை␢ நான் தண்டிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

14 ⁽“ஆதலால் நான் அவளை␢ நயமாகக் கவர்ந்திழுப்பேன்;␢ பாலைநிலத்துக்கு அவளைக்␢ கூட்டிப்போவேன்;␢ நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.⁾

15 ⁽அவளுடைய திராட்சைத் தோட்டங்களை␢ அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்;␢ ஆகோர் பள்ளத்தாக்கை␢ நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்;␢ அப்போது அவள் அங்கே␢ தன் இளமையின் நாள்களிலும்,␢ எகிப்து நாட்டினின்று␢ வெளியேறிய காலத்திலும்␢ பாடியதுபோல் பாடுவாள்.⁾

16 ⁽அந்நாளில், ‘என் கணவன்’ என␢ என்னை அவள் அழைப்பாள்;␢ ‘என் பாகாலே’* என இனிமேல்␢ என்னிடம் சொல்லமாட்டாள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

17 ⁽அவளுடைய நாவினின்று␢ பாகால்களின் பெயர்களை␢ நீக்கிவிடுவேன்;␢ இனிமேல் அவர்களைப்␢ பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.⁾

18 ⁽அந்நாளில், காட்டு விலங்குகளோடும்,␢ வானத்துப் பறவைகளோடும்,␢ நிலத்தில் ஊர்வனவற்றோடும்␢ அவர்களுக்காக நான்␢ ஓர் உடன்படிக்கை செய்வேன்;␢ வில்லையும் வாளையும் போரையும்␢ நாட்டினின்று அகற்றிவிடுவேன்;␢ அச்சமின்றி அவர்கள்␢ படுத்திருக்கச் செய்வேன்.⁾

19 ⁽“இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும்␢ உன்னோடு நான்␢ மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்;␢ நேர்மையிலும் நீதியிலும்␢ பேரன்பிலும் உன்னோடு␢ மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.⁾

20 ⁽மாறாத அன்புடன் உன்னோடு␢ மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்;␢ ஆண்டவராம் என்னை␢ நீயும் அறிந்துகொள்வாய்.⁾

21 ⁽மேலும் அந்நாளில் நான்␢ மறுமொழி அளிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “நான் வானத்தின் வழியாய்␢ மறுமொழி அளிப்பேன்;␢ அது நிலத்தின் வழியாய்␢ மறுமொழி தரும்.⁾

22 ⁽நிலம், கோதுமை, திராட்சை இரசம்,␢ எண்ணெய் வழியாய்␢ மறுமொழி தரும்.␢ அவை இஸ்ரியேல்வழியாய்␢ மறுமொழி தரும்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

23 ⁽நான் அவனை* எனக்கென்று␢ நிலத்தில் விதைப்பேன்,␢ **‘லோருகாமா’வுக்குக்␢ கருணை காட்டுவேன்;␢ ‘லோ அம்மீ’யை நோக்கி,␢ ‘நீங்கள் என் மக்கள்’ என்பேன்;␢ அவனும் ‘நீரே என் கடவுள்’ என்பான்.⁾

Hosea 2 ERV IRV TRV