Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 10:1 in Tamil

Home Bible Hebrews Hebrews 10 Hebrews 10:1

எபிரெயர் 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது.

Tamil Easy Reading Version
நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது.

Thiru Viviliam
வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை; அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. எனவேதான், ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும் அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.

Title
கிறிஸ்துவின் பலி நம்மை முழுமையாக்குகிறது

Other Title
6. இயேசு கிறிஸ்துவின் பலியின் மேன்மை⒣

Hebrews 10Hebrews 10:2

King James Version (KJV)
For the law having a shadow of good things to come, and not the very image of the things, can never with those sacrifices which they offered year by year continually make the comers thereunto perfect.

American Standard Version (ASV)
For the law having a shadow of the good `things’ to come, not the very image of the things, can never with the same sacrifices year by year, which they offer continually, make perfect them that draw nigh.

Bible in Basic English (BBE)
For the law, being only a poor copy of the future good things, and not the true image of those things, is never able to make the people who come to the altar every year with the same offerings completely clean.

Darby English Bible (DBY)
For the law, having a shadow of the coming good things, not the image itself of the things, can never, by the same sacrifices which they offer continually yearly, perfect those who approach.

World English Bible (WEB)
For the law, having a shadow of the good to come, not the very image of the things, can never with the same sacrifices year by year, which they offer continually, make perfect those who draw near.

Young’s Literal Translation (YLT)
For the law having a shadow of the coming good things — not the very image of the matters, every year, by the same sacrifices that they offer continually, is never able to make perfect those coming near,

எபிரெயர் Hebrews 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
For the law having a shadow of good things to come, and not the very image of the things, can never with those sacrifices which they offered year by year continually make the comers thereunto perfect.

Σκιὰνskianskee-AN
γὰρgargahr
ἔχωνechōnA-hone
hooh
νόμοςnomosNOH-mose
τῶνtōntone
μελλόντωνmellontōnmale-LONE-tone
ἀγαθῶνagathōnah-ga-THONE
οὐκoukook
αὐτὴνautēnaf-TANE
τὴνtēntane
εἰκόναeikonaee-KOH-na
τῶνtōntone
πραγμάτωνpragmatōnprahg-MA-tone
κατ'katkaht
ἐνιαυτὸνeniautonane-ee-af-TONE
ταῖςtaistase
αὐταῖςautaisaf-TASE
θυσίαιςthysiaisthyoo-SEE-ase
ἃςhasahs
προσφέρουσινprospherousinprose-FAY-roo-seen
εἰςeisees
τὸtotoh
διηνεκὲςdiēnekesthee-ay-nay-KASE
οὐδέποτεoudepoteoo-THAY-poh-tay
δύναταιdynataiTHYOO-na-tay
τοὺςtoustoos
προσερχομένουςproserchomenousprose-are-hoh-MAY-noos
τελειῶσαι·teleiōsaitay-lee-OH-say

Cross Reference

எபிரெயர் 8:5
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

கொலோசெயர் 2:17
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

எபிரெயர் 9:11
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

எபிரெயர் 7:18
முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

எபிரெயர் 9:23
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.

எபிரெயர் 9:8
அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.

எபிரெயர் 9:25
பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

எபிரெயர் 10:3
அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.

எபிரெயர் 10:11
அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.


Tags இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால் வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது
Hebrews 10:1 in Tamil Concordance Hebrews 10:1 in Tamil Interlinear Hebrews 10:1 in Tamil Image