1பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,And the LORD said unto Moses, Go in unto Pharaoh: for I have hardened his heart, and the heart of his servants, that I might show these my signs before him:
2நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.And that thou mayest tell in the ears of thy son, and of thy son's son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.
3அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.And Moses and Aaron came in unto Pharaoh, and said unto him, Thus saith the LORD God of the Hebrews, How long wilt thou refuse to humble thyself before me? let my people go, that they may serve me.
4நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.Else, if thou refuse to let my people go, behold, to morrow will I bring the locusts into thy coast:
5தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத்தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.And they shall cover the face of the earth, that one cannot be able to see the earth: and they shall eat the residue of that which is escaped, which remaineth unto you from the hail, and shall eat every tree which groweth for you out of the field:
6உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.And they shall fill thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; which neither thy fathers, nor thy fathers' fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned himself, and went out from Pharaoh.
7அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.And Pharaoh's servants said unto him, How long shall this man be a snare unto us? let the men go, that they may serve the LORD their God: knowest thou not yet that Egypt is destroyed?
8அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.And Moses and Aaron were brought again unto Pharaoh: and he said unto them, Go, serve the LORD your God: but who are they that shall go?
9அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast unto the LORD.
10அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
11அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.Not so: go now ye that are men, and serve the LORD; for that ye did desire. And they were driven out from Pharaoh's presence.
12அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.And the LORD said unto Moses, Stretch out thine hand over the land of Egypt for the locusts, that they may come up upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.
13அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.And Moses stretched forth his rod over the land of Egypt, and the LORD brought an east wind upon the land all that day, and all that night; and when it was morning, the east wind brought the locusts.
14வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.And the locust went up over all the land of Egypt, and rested in all the coasts of Egypt: very grievous were they; before them there were no such locusts as they, neither after them shall be such.
15அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.For they covered the face of the whole earth, so that the land was darkened; and they did eat every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing in the trees, or in the herbs of the field, through all the land of Egypt.
16அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against the LORD your God, and against you.
17இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God, that he may take away from me this death only.
18அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.And he went out from Pharaoh, and entreated the LORD.
19அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.And the LORD turned a mighty strong west wind, which took away the locusts, and cast them into the Red sea; there remained not one locust in all the coasts of Egypt.
20கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.But the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go.
21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.And the LORD said unto Moses, Stretch out thine hand toward heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.
22மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days:
23மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.They saw not one another, neither rose any from his place for three days: but all the children of Israel had light in their dwellings.
24அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.
25அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.And Moses said, Thou must give us also sacrifices and burnt offerings, that we may sacrifice unto the LORD our God.
26எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.Our cattle also shall go with us; there shall not an hoof be left behind; for thereof must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.
27கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.But the LORD hardened Pharaoh's heart, and he would not let them go.
28பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.And Pharaoh said unto him, Get thee from me, take heed to thyself, see my face no more; for in that day thou seest my face thou shalt die.
29அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.
1Pinpu Karththar Mosesyai Nnokki: nee paarvonidaththil po. Avarkal naduvae naan intha en ataiyaalangalaich seyyumpatikkum,And the LORD said unto Moses, Go in unto Pharaoh: for I have hardened his heart, and the heart of his servants, that I might show these my signs before him:
2Naan ekipthilae nadappiththathaiyum naan avarkalukkul seytha en ataiyaalangalaiyum, nee un pillaikalin sevikal kaetkavum, un pillaikalutaiya pillaikalin sevikal kaetkavum vivariththuch sollumpatikkum, naanae Karththar enpathai neengal ariyumpatikkum, naan avan iruthayaththaiyum avan ooliyakkaararin iruthayaththaiyum katinappaduththinaen entar.And that thou mayest tell in the ears of thy son, and of thy son's son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.
3Appatiyae Mosesyum aaronum paarvonidaththil vanthu: unnaith thaalththa nee ethuvaraikkum manathillaathiruppaay? En samukaththil enakku aaraathanai seyya en janangalaip pokavidu.And Moses and Aaron came in unto Pharaoh, and said unto him, Thus saith the LORD God of the Hebrews, How long wilt thou refuse to humble thyself before me? let my people go, that they may serve me.
4Nee en janangalaip pokavidamaattaேn enpaayaakil, naan naalaikku un ellaikalukkullae vettukkilikalai varappannnuvaen.Else, if thou refuse to let my people go, behold, to morrow will I bring the locusts into thy coast:
5Tharai kaannaathapatikku avaikal poomiyin mukaththai mooti, kal malaikkuththappi meethiyaaka vaikkappattathaip patchiththu, veliyilae thulirkkira setikalai yellaam thintupodum.And they shall cover the face of the earth, that one cannot be able to see the earth: and they shall eat the residue of that which is escaped, which remaineth unto you from the hail, and shall eat every tree which groweth for you out of the field:
6Un veedukalum un ooliyakkaararutaiya veedukalum ekipthiyarin veedukalum ellaam avaikalaal nirampum; unpithaakkalum pithaakkalin pithaakkalum thaangal poomiyil thontiya naalmuthal innaalvaraikkum appatippattavaikalaik kanndathillai entu epireyarin thaevanaakiya Karththar sollukiraar entu solli, thirumpikkonndu paarvonai vittup purappattan.And they shall fill thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; which neither thy fathers, nor thy fathers' fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned himself, and went out from Pharaoh.
7Appoluthu paarvonutaiya ooliyakkaarar avanai Nnokki enthamattum intha manithan namakkuk kannnniyaay iruppaan? Thangal thaevanaakiya karththarukku aaraathanai seyya antha manitharaip pokavidum; ekipthu alinthuponathai neer innum ariyavillaiyaa entarkal.And Pharaoh's servants said unto him, How long shall this man be a snare unto us? let the men go, that they may serve the LORD their God: knowest thou not yet that Egypt is destroyed?
8Appoluthu Mosesyum aaronum paarvonidaththukkuth thirumpa alaikkappattarkal. Avan avarkalai Nnokki: neengal poy ungal thaevanaakiya karththarukku aaraathanai seyyungal entu solli; yaaraar pokiraarkal entu kaettan.And Moses and Aaron were brought again unto Pharaoh: and he said unto them, Go, serve the LORD your God: but who are they that shall go?
9Atharku Moses: engal ilainjarodum, engal muthiyorodum, engal kumaararodum, engal kumaaraththikalodum, engal aadukalaiyum engal maadukalaiyum koottikkonndu povom, naangal karththarukkup panntikai konndaadavaenndum entan.And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast unto the LORD.
10Appoluthu avan: naan ungalaiyum ungal kulanthaikalaiyum eppati viduvaeno, appatiyae Karththar ungalotiruppaaraaka; echcharikkaiyaayirungal, ungalukkup pollaappu naeridum;And he said unto them, Let the LORD be so with you, as I will let you go, and your little ones: look to it; for evil is before you.
11Appati vaenndaam; purusharaakiya neengal poy, karththarukku aaraathanai seyyungal; ithuthaanae neengal virumpik kaettathu entu sonnaan. Avarkal paarvon samukaththinintu thuraththividappattarkal.Not so: go now ye that are men, and serve the LORD; for that ye did desire. And they were driven out from Pharaoh's presence.
12Appoluthu Karththar Mosesyai Nnokki: vettukkilikal ekipthu thaesaththin mael vanthu, kalmalaiyinaal aliyaatha poomiyin payirvakaikalaiyellaam patchikkumpatikku, ekipthu thaesaththinmael un kaiyai neettu entar.And the LORD said unto Moses, Stretch out thine hand over the land of Egypt for the locusts, that they may come up upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.
13Appatiyae Moses than kolai ekipthu thaesaththinmael neettinaan; appoluthu Karththar antu pakal muluvathum antu iraa muluvathum geelkaattaைth thaesaththinmael veesap pannnninaar; vitiyakkaalaththilae geelkaattaு vettukkilikalaik konnduvanthathu.And Moses stretched forth his rod over the land of Egypt, and the LORD brought an east wind upon the land all that day, and all that night; and when it was morning, the east wind brought the locusts.
14Vettukkilikal ekipthu thaesamengum parampi, ekipthin ellaiyil engum mikavum aeraalamaay irangittaு; appatippatta vettukkilikal atharkumun irunthathumillai, atharkuppin iruppathumillai.And the locust went up over all the land of Egypt, and rested in all the coasts of Egypt: very grievous were they; before them there were no such locusts as they, neither after them shall be such.
15Avaikal poomiyin mukam muluthaiyum mootittaு; thaesam avaikalaal anthakaarappattathu; kalmalaikkuththappiyiruntha nilaththin payirvakaikal yaavaiyum marangalin kanikal yaavaiyum avaikal patchiththup pottathu; ekipthu thaesam engumulla marangalilum vayalveliyin payirvakaikalilum oru pachchilaiyum meethiyaayirukkavillai.For they covered the face of the whole earth, so that the land was darkened; and they did eat every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing in the trees, or in the herbs of the field, through all the land of Egypt.
16Appoluthu paarvon Mosesyaiyum aaronaiyum theeviramaay alaippiththu: ungal thaevanaakiya karththarukkum ungalukkum virothamaakap paavam seythaen.Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against the LORD your God, and against you.
17Intha oru muraimaaththiram nee en paavaththai mannikka vaenndum; ungal thaevanaakiya Karththar inthach saavai maaththiram ennai vittu vilakka avarai Nnokki vinnnappam pannnungal entan.Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God, that he may take away from me this death only.
18Avan paarvonai vittup purappattup poy, karththarai Nnokki vinnnappam pannnninaan.And he went out from Pharaoh, and entreated the LORD.
19Appoluthu Karththar makaa palaththa maelkaattaை veesumpati seythaar; athu vettukkilikalai atiththukkonndu poy sengadalilae pottathu; ekipthin ellaiyil engum oru vettukkiliyaakilum meethiyaayirunthathillai.And the LORD turned a mighty strong west wind, which took away the locusts, and cast them into the Red sea; there remained not one locust in all the coasts of Egypt.
20Karththaro paarvonin iruthayaththaik katinappaduththinaar; avan Israel puththiraraip pokavidavillai.But the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go.
21Appoluthu Karththar Mosesyai Nnokki: thadavikkonntirukkaththakkathaana irul ekipthu thaesaththinmael unndaakumpatikku, un kaiyai vaanaththirku naeraaka neettu entar.And the LORD said unto Moses, Stretch out thine hand toward heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.
22Moses than kaiyai vaanaththirku naeraaka neettinaan; appoluthu ekipthu thaesamengum moontunaal mattum kaarirul unndaayittaு.And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days:
23Moontunaal mattum oruvaraiyoruvar kaanavumillai, oruvarum thammidaththaivittu elunthirukkavum illai; Israel puththirar yaavarukkumovenil avarkal vaasasthalangalilae velichchamirunthathu.They saw not one another, neither rose any from his place for three days: but all the children of Israel had light in their dwellings.
24Appoluthu paarvon Mosesyai alaippiththu: neengal poyk karththarukku aaraathanai seyyungal; ungal aadukalum ungal maadukalum maaththiram niraுththappadavaenndum; ungal kulanthaikal ungaludan pokalaam entan.And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.
25Atharku Moses: naangal engal thaevanaakiya karththarukkup pataikkum palikalaiyum sarvaanga thakana palikalaiyum neer engal kaiyilae kodukkavaenndum.And Moses said, Thou must give us also sacrifices and burnt offerings, that we may sacrifice unto the LORD our God.
26Engal miruka jeevankalum engalotae koodavaravaenndum; oru kulampum pinvaikkappaduvathillai; engal thaevanaakiya karththarukku aaraathanai seykiratharku avaikalilirunthu edukkavaenndum; innathaikkonndu karththarukku aaraathanai seyvom enpathu naangal angae poych serumalavum engalukkuth theriyaathu entan.Our cattle also shall go with us; there shall not an hoof be left behind; for thereof must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.
27Karththar paarvonutaiya iruthayaththaik katinappaduththinaar; avan avarkalaip pokavida manathillaathirunthaan.But the LORD hardened Pharaoh's heart, and he would not let them go.
28Paarvon avanai Nnokki: ennaivittu appaalae po; nee ini en mukaththaik kaannaathapati echcharikkaiyaayiru; nee ini en mukaththaik kaanum naalil saavaay entan.And Pharaoh said unto him, Get thee from me, take heed to thyself, see my face no more; for in that day thou seest my face thou shalt die.
29Appoluthu Moses: neer sonnathu sari; ini naan ummutaiya mukaththaik kaannpathillai entan.And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.