Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seeyonae Seeyonae - சீயோனே சீயோனே

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

GMajor B: 2/4

சீயோனே சீயோனே
உன் வல்லமையை
இன்று தரித்துக் கொள்
உம் நேசர் வருகிறார்
வருகிறார் வருகிறார் (2)

வருவேன் என்றவர் தாமதியாரே
வந்திடும் நேரம் நெருங்கிடுதே
கறை திரை இல்லாத மணவாட்டியாய்
நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே

நிந்தை சுமந்த பக்தருக்காய்
நீதியின் சூரியன் தோன்றிடுவார்
ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று
ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே

பரமனின் சேவை செய்திடுவோம்
பலன் களை அன்று பெற்றிடுவோம்
மகிமையின் பிரகாச பாத்திரமாய்
மன்னவர் பணியினை செய்திடுவோம் -சீயோனே

நீதியின் சால்வையை தரித்திடுவோம்
நித்திய சேவையில் விரைந்திடுவோம்
இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய்
இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம் -சீயோனே

அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை
ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும்
பரமனின் முகம் காணும் நாளதிலே
மகிமையின் சாயலை அணிந்திடுவோம் -சீயோனே

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae Lyrics in English

Seeyonae seeyonae – Seeyonae Seeyonae GMajor B: 2/4 seeyonae seeyonae un vallamaiyai intu thariththuk kol um naesar varukiraar varukiraar varukiraar (2) varuvaen entavar thaamathiyaarae vanthidum naeram nerungiduthae karai thirai illaatha manavaattiyaay niraivaay Yesuvai santhiththiduvom -seeyonae ninthai sumantha paktharukkaay neethiyin sooriyan thontiduvaar jeya geetham paati suththar antu jeya kempeeramaay paranthiduvom -seeyonae paramanin sevai seythiduvom palan kalai antu pettiduvom makimaiyin pirakaasa paaththiramaay mannavar panniyinai seythiduvom -seeyonae neethiyin saalvaiyai thariththiduvom niththiya sevaiyil virainthiduvom iratchippin aatai alangaaramaay Yesuvin karaththil thikalnthiduvom -seeyonae Alleluya paadidum paramanin senai aarpparippodu mun sentidum paramanin mukam kaanum naalathilae makimaiyin saayalai anninthiduvom -seeyonae

PowerPoint Presentation Slides for the song சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seeyonae Seeyonae – சீயோனே சீயோனே PPT
Seeyonae Seeyonae PPT

சீயோனே வருகிறார் பரமனின் Seeyonae நீதியின் ஜெய செய்திடுவோம் மகிமையின் GMajor B வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருவேன் என்றவர் தாமதியாரே தமிழ்