நீதிமொழிகள் 24

fullscreen1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

fullscreen2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

fullscreen3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

fullscreen4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகல விதைப்பொருள்களும் நிறைந்திருக்கும்.

fullscreen5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

fullscreen6 நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

fullscreen7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

fullscreen8 தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

fullscreen9 தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

fullscreen10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.

fullscreen11 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

fullscreen12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

fullscreen13 என் மՠΩே, தேனைச் சாப்பிΟு, அது நல்லது; கூட͠Οிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

fullscreen14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

fullscreen15 துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

fullscreen16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

fullscreen17 உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

fullscreen18 கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

fullscreen19 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

fullscreen20 துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

fullscreen21 என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

fullscreen22 சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

fullscreen23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.

fullscreen24 துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

fullscreen25 அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

fullscreen26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

fullscreen27 வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

fullscreen28 நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

fullscreen29 அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

fullscreen30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

fullscreen31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.

fullscreen32 அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

fullscreen33 இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

fullscreen34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.

Tamil Easy Reading Version
ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும்.

Thiru Viviliam
⁽பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.⁾

Proverbs 25:25Proverbs 25Proverbs 25:27

King James Version (KJV)
A righteous man falling down before the wicked is as a troubled fountain, and a corrupt spring.

American Standard Version (ASV)
`As’ a troubled fountain, and a corrupted spring, `So is’ a righteous man that giveth way before the wicked.

Bible in Basic English (BBE)
Like a troubled fountain and a dirty spring, is an upright man who has to give way before evil-doers.

Darby English Bible (DBY)
A troubled fountain, and a defiled well, is a righteous [man] that giveth way before the wicked.

World English Bible (WEB)
Like a muddied spring, and a polluted well, So is a righteous man who gives way before the wicked.

Young’s Literal Translation (YLT)
A spring troubled, and a fountain corrupt, `Is’ the righteous falling before the wicked.

நீதிமொழிகள் Proverbs 25:26
துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
A righteous man falling down before the wicked is as a troubled fountain, and a corrupt spring.

A
righteous
מַעְיָ֣ןmaʿyānma-YAHN
man
falling
down
נִ֭רְפָּשׂnirpośNEER-pose
before
וּמָק֣וֹרûmāqôroo-ma-KORE
the
wicked
מָשְׁחָ֑תmošḥātmohsh-HAHT
troubled
a
as
is
צַ֝דִּ֗יקṣaddîqTSA-DEEK
fountain,
מָ֣טmāṭmaht
and
a
corrupt
לִפְנֵֽיlipnêleef-NAY
spring.
רָשָֽׁע׃rāšāʿra-SHA