பிரசங்கி 6:9
ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.
Thiru Viviliam
இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.⒫
King James Version (KJV)
Better is the sight of the eyes than the wandering of the desire: this is also vanity and vexation of spirit.
American Standard Version (ASV)
Better is the sight of the eyes than the wandering of the desire: this also is vanity and a striving after wind.
Bible in Basic English (BBE)
What the eyes see is better than the wandering of desire. This is to no purpose and a desire for wind.
Darby English Bible (DBY)
Better is the seeing of the eyes than the wandering of the desire: this also is vanity and pursuit of the wind.
World English Bible (WEB)
Better is the sight of the eyes than the wandering of the desire. This also is vanity and a chasing after wind.
Young’s Literal Translation (YLT)
Better `is’ the sight of the eyes than the going of the soul. This also `is’ vanity and vexation of spirit.
பிரசங்கி Ecclesiastes 6:9
ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
Better is the sight of the eyes than the wandering of the desire: this is also vanity and vexation of spirit.
| ט֛וֹב | ṭôb | tove | |
| מַרְאֵ֥ה | marʾē | mahr-A | |
| עֵינַ֖יִם | ʿênayim | ay-NA-yeem | |
| מֵֽהֲלָךְ | mēhălok | MAY-huh-loke | |
| נָ֑פֶשׁ | nāpeš | NA-fesh | |
| גַּם | gam | ɡahm | |
| זֶ֥ה | ze | zeh | |
| הֶ֖בֶל | hebel | HEH-vel | |
| וּרְע֥וּת | ûrĕʿût | oo-reh-OOT | |
| רֽוּחַ׃ | rûaḥ | ROO-ak |
Cross Reference
பிரசங்கி 1:14
சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
எரேமியா 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
பிரசங்கி 6:2
அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.
பிரசங்கி 5:18
இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.
பிரசங்கி 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.
பிரசங்கி 3:12
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
பிரசங்கி 2:22
மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?
பிரசங்கி 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
பிரசங்கி 1:2
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
நீதிமொழிகள் 30:15
தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
யோபு 31:7
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
Tags ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம் இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது
Ecclesiastes 6:9 in Tamil Concordance Ecclesiastes 6:9 in Tamil Interlinear Ecclesiastes 6:9 in Tamil Image