Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:19 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:19

உபாகமம் 8:19
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன்.

Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தரை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். மற்ற பொய்த் தெய்வங்களை ஒருபோதும் பின்பற்றிவிடாதீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் இன்று உங்களை எச்சரிக்கின்றேன், நீங்கள் கண்டிப்பாக அழிந்துவிடுவீர்கள்!

Thiru Viviliam
மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

Deuteronomy 8:18Deuteronomy 8Deuteronomy 8:20

King James Version (KJV)
And it shall be, if thou do at all forget the LORD thy God, and walk after other gods, and serve them, and worship them, I testify against you this day that ye shall surely perish.

American Standard Version (ASV)
And it shall be, if thou shalt forget Jehovah thy God, and walk after other gods, and serve them, and worship them, I testify against you this day that ye shall surely perish.

Bible in Basic English (BBE)
And it is certain that if at any time you are turned away from the Lord your God, and go after other gods, to be their servants and to give them worship, destruction will overtake you.

Darby English Bible (DBY)
And it shall be, if thou do at all forget Jehovah thy God, and go after other gods, and serve them, and bow down to them, I testify against you this day that ye shall utterly perish.

Webster’s Bible (WBT)
And it shall be, if thou shalt at all forget the LORD thy God, and walk after other gods, and serve them, and worship them, I testify against you this day that ye shall surely perish.

World English Bible (WEB)
It shall be, if you shall forget Yahweh your God, and walk after other gods, and serve them, and worship them, I testify against you this day that you shall surely perish.

Young’s Literal Translation (YLT)
`And it hath been — if thou really forget Jehovah thy God, and hast gone after other gods, and served them, and bowed thyself to them, I have testified against you to-day that ye do utterly perish;

உபாகமம் Deuteronomy 8:19
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
And it shall be, if thou do at all forget the LORD thy God, and walk after other gods, and serve them, and worship them, I testify against you this day that ye shall surely perish.

וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
אִםʾimeem
שָׁכֹ֤חַšākōaḥsha-HOH-ak
תִּשְׁכַּח֙tiškaḥteesh-KAHK
אֶתʾetet
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
וְהָֽלַכְתָּ֗wĕhālaktāveh-ha-lahk-TA
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
וַֽעֲבַדְתָּ֖םwaʿăbadtāmva-uh-vahd-TAHM
וְהִשְׁתַּֽחֲוִ֣יתָwĕhištaḥăwîtāveh-heesh-ta-huh-VEE-ta
לָהֶ֑םlāhemla-HEM
הַֽעִדֹ֤תִיhaʿidōtîha-ee-DOH-tee
בָכֶם֙bākemva-HEM
הַיּ֔וֹםhayyômHA-yome
כִּ֥יkee
אָבֹ֖דʾābōdah-VODE
תֹּֽאבֵדֽוּן׃tōʾbēdûnTOH-vay-DOON

Cross Reference

உபாகமம் 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

லுூக்கா 13:5
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

லுூக்கா 13:3
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

லுூக்கா 12:47
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

செப்பனியா 3:6
ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷரில்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.

செப்பனியா 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

ஆமோஸ் 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

தானியேல் 9:2
தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.

1 சாமுவேல் 12:25
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

யோசுவா 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

உபாகமம் 30:18
நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

உபாகமம் 29:25
அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,

உபாகமம் 28:58
உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,


Tags உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து அவர்களைப் பணிந்து கொள்வாயானால் நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்
Deuteronomy 8:19 in Tamil Concordance Deuteronomy 8:19 in Tamil Interlinear Deuteronomy 8:19 in Tamil Image