Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 5:16 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 5 Deuteronomy 5:16

உபாகமம் 5:16
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

Tamil Easy Reading Version
‘உன் தாய், தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீ இதைச் செய்வதற்குக் கட்டளையிட்டுள்ளார். நீ இந்தக் கட்டளையைப் பின்பற்றினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கும் நாட்டிலே உன்னை நீண்ட நாள் வாழச் செய்வார்.

Thiru Viviliam
உன் தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.⒫

Deuteronomy 5:15Deuteronomy 5Deuteronomy 5:17

King James Version (KJV)
Honor thy father and thy mother, as the LORD thy God hath commanded thee; that thy days may be prolonged, and that it may go well with thee, in the land which the LORD thy God giveth thee.

American Standard Version (ASV)
Honor thy father and thy mother, as Jehovah thy God commanded thee; that thy days may be long, and that it may go well with thee, in the land which Jehovah thy God giveth thee.

Bible in Basic English (BBE)
Give honour to your father and your mother, as you have been ordered by the Lord your God; so that your life may be long and all may be well for you in the land which the Lord your God is giving you.

Darby English Bible (DBY)
Honour thy father and thy mother, as Jehovah thy God hath commanded thee; that thy days may be prolonged, and that it may be well with thee in the land which Jehovah thy God giveth thee.

Webster’s Bible (WBT)
Honor thy father and thy mother, as the LORD thy God hath commanded thee; that thy days may be prolonged, and that it may be well with thee, in the land which the LORD thy God giveth thee.

World English Bible (WEB)
“Honor your father and your mother, as Yahweh your God commanded you; that your days may be long, and that it may go well with you, in the land which Yahweh your God gives you.

Young’s Literal Translation (YLT)
`Honour thy father and thy mother, as Jehovah thy God hath commanded thee, so that thy days are prolonged, and so that it is well with thee, on the ground which Jehovah thy God is giving to thee.

உபாகமம் Deuteronomy 5:16
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
Honor thy father and thy mother, as the LORD thy God hath commanded thee; that thy days may be prolonged, and that it may go well with thee, in the land which the LORD thy God giveth thee.

כַּבֵּ֤דkabbēdka-BADE
אֶתʾetet
אָבִ֙יךָ֙ʾābîkāah-VEE-HA
וְאֶתwĕʾetveh-ET
אִמֶּ֔ךָʾimmekāee-MEH-ha
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
צִוְּךָ֖ṣiwwĕkātsee-weh-HA
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
לְמַ֣עַן׀lĕmaʿanleh-MA-an
יַֽאֲרִיכֻ֣ןyaʾărîkunya-uh-ree-HOON
יָמֶ֗יךָyāmêkāya-MAY-ha
וּלְמַ֙עַן֙ûlĕmaʿanoo-leh-MA-AN
יִ֣יטַבyîṭabYEE-tahv
לָ֔ךְlāklahk
עַ֚לʿalal
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
אֲשֶׁרʾăšeruh-SHER
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
לָֽךְ׃lāklahk

Cross Reference

உபாகமம் 4:40
நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

யாத்திராகமம் 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

கொலோசெயர் 3:20
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

உபாகமம் 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

லேவியராகமம் 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

லுூக்கா 18:20
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

மாற்கு 10:19
விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.

மாற்கு 7:10
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தன் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

மத்தேயு 19:19
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.

மத்தேயு 15:4
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.


Tags உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும் நீ நன்றாயிருப்பதற்கும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
Deuteronomy 5:16 in Tamil Concordance Deuteronomy 5:16 in Tamil Interlinear Deuteronomy 5:16 in Tamil Image