Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Epphodhum Ummoduthan - எப்போதும் உம்மோடுதான்

எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்

என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை (2)
ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்

1. பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு

2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்

3. காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்

4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை

5. உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன்

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan Lyrics in English

Eppothum ummoduthaan
Um valakkaram ennoduthaan

En vaanjaiyellaam neerthaanae
En vaalkkai ellaam um pukalthaanae
Aaraathanai aaraathanai (2)
Aayul irukkumvarai (en) – eppothum

1. Paralokaththil ummaiyallaamal
Enakku yaarunndu
Poolokaththil ummaiththavira
Vaeraே viruppamillai – enakku

2. Ententaikkum en ullaththin
Pelanae neerthaanaiyaa
Um siththam pola nadaththukireer
Makimaiyil aettaுk kolveer – um

3. Kaarunnyaththin kayiraுkalaal
Katti ennai iluththuk konnteer
Paeranpinaal annaiththuk konnteer-um
Periyavanaakki vittir – ennaip

4. Kaluththil ulla nukam neekki
Nimirnthu nadakkach seytheer – en
Kattaுk koduththeer karam pitiththu
Kaividaamal kaappaattinaar – ithuvarai

5. Ummaiththaanae ataikkalamaay
Anntik konntaen anuthinamum
Pukalidamae en maraividamae
Um pukalthanai solli varuvaen

PowerPoint Presentation Slides for the song எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Epphodhum Ummoduthan – எப்போதும் உம்மோடுதான் PPT
Epphodhum Ummoduthan PPT

உம் எப்போதும் ஆராதனை உம்மோடுதான் வலக்கரம் என்னோடுதான் வாஞ்சையெல்லாம் நீர்தானே வாழ்க்கை புகழ்தானே ஆயுள் இருக்கும்வரை பரலோகத்தில் உம்மையல்லாமல் யாருண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை தமிழ்