மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.
அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?
கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
And that which cometh | וְהָֽעֹלָה֙ | wĕhāʿōlāh | veh-ha-oh-LA |
into | עַל | ʿal | al |
mind your | ר֣וּחֲכֶ֔ם | rûḥăkem | ROO-huh-HEM |
all, at | הָי֖וֹ | hāyô | ha-YOH |
be not shall | לֹ֣א | lōʾ | loh |
תִֽהְיֶ֑ה | tihĕye | tee-heh-YEH | |
that | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
say, | אֹמְרִ֗ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
be will We | נִֽהְיֶ֤ה | nihĕye | nee-heh-YEH |
as the heathen, | כַגּוֹיִם֙ | kaggôyim | ha-ɡoh-YEEM |
as the families | כְּמִשְׁפְּח֣וֹת | kĕmišpĕḥôt | keh-meesh-peh-HOTE |
countries, the of | הָאֲרָצ֔וֹת | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE |
to serve | לְשָׁרֵ֖ת | lĕšārēt | leh-sha-RATE |
wood | עֵ֥ץ | ʿēṣ | ayts |
and stone. | וָאָֽבֶן׃ | wāʾāben | va-AH-ven |