1ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
2அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.And they went about in Judah, and gathered the Levites out of all the cities of Judah, and the chief of the fathers of Israel, and they came to Jerusalem.
3அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக் குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.And all the congregation made a covenant with the king in the house of God. And he said unto them, Behold, the king's son shall reign, as the LORD hath said of the sons of David.
4நீங்கள் செய்யவேண்டிய காரியமென்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,This is the thing that ye shall do; A third part of you entering on the sabbath, of the priests and of the Levites, shall be porters of the doors;
5மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.And a third part shall be at the king's house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of the LORD.
6ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.But let none come into the house of the LORD, save the priests, and they that minister of the Levites; they shall go in, for they are holy: but all the people shall keep the watch of the LORD.
7லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.And the Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whosoever else cometh into the house, he shall be put to death: but be ye with the king when he cometh in, and when he goeth out.
8ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை.So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.
9தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,Moreover Jehoiada the priest delivered to the captains of hundreds spears, and bucklers, and shields, that had been king David's, which were in the house of God.
10அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.And he set all the people, every man having his weapon in his hand, from the right side of the temple to the left side of the temple, along by the altar and the temple, by the king round about.
11பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.Then they brought out the king's son, and put upon him the crown, and gave him the testimony, and made him king. And Jehoiada and his sons anointed him, and said, God save the king.
12ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,Now when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of the LORD:
13இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.And she looked, and, behold, the king stood at his pillar at the entering in, and the princes and the trumpets by the king: and all the people of the land rejoiced, and sounded with trumpets, also the singers with instruments of music, and such as taught to sing praise. Then Athaliah rent her clothes, and said, Treason, Treason.
14ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவனாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.Then Jehoiada the priest brought out the captains of hundreds that were set over the host, and said unto them, Have her forth of the ranges: and whoso followeth her, let him be slain with the sword. For the priest said, Slay her not in the house of the LORD.
15அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.So they laid hands on her; and when she was come to the entering of the horse gate by the king's house, they slew her there.
16அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.And Jehoiada made a covenant between him, and between all the people, and between the king, that they should be the LORD's people.
17அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.Then all the people went to the house of Baal, and brake it down, and brake his altars and his images in pieces, and slew Mattan the priest of Baal before the altars.
18தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,Also Jehoiada appointed the offices of the house of the LORD by the hand of the priests the Levites, whom David had distributed in the house of the LORD, to offer the burnt offerings of the LORD, as it is written in the law of Moses, with rejoicing and with singing, as it was ordained by David.
19யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.And he set the porters at the gates of the house of the LORD, that none which was unclean in any thing should enter in.
20நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of the LORD: and they came through the high gate into the king's house, and set the king upon the throne of the kingdom.
21தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள், அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.And all the people of the land rejoiced: and the city was quiet, after that they had slain Athaliah with the sword.
1Aelaam varushaththilae yoythaa thidankonndu, nooraுpaerukku athipathikalaakiya erokaamin kumaaran asariyaavaiyum, yokanaanin kumaaran ismavaelaiyum, opaethin kumaaran asariyaavaiyum, aathaayaavin kumaaran maaseyaavaiyum, sikriyin kumaaran elishaapaaththaiyum than udanpatikkaikku utpaduththinaan.And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
2Avarkal yoothaavilae suttiththirinthu, yoothaavin pattanangalilellaam irukkira laeviyaraiyum, isravaelutaiya pithaakkalin vamsaththalaivaraiyum koottikkonndu erusalaemukku vanthaarkal.And they went about in Judah, and gathered the Levites out of all the cities of Judah, and the chief of the fathers of Israel, and they came to Jerusalem.
3Anthach Sabaiyaar ellaarum thaevanutaiya aalayaththil raajaavotae udanpatikkai seythaarkal; yoythaa avarkalai Nnokki: itho, Karththar thaaveethin kumaararaik kuriththuch sonnapatiyae raajaavin kumaaran raajaavaaka vaenndum.And all the congregation made a covenant with the king in the house of God. And he said unto them, Behold, the king's son shall reign, as the LORD hath said of the sons of David.
4Neengal seyyavaenntiya kaariyamennavental, ivvaaraththil, muraippati varukira aasaariyarum laeviyarumaana ungalil moontil orupangu olimukavaasalkalaiyum,This is the thing that ye shall do; A third part of you entering on the sabbath, of the priests and of the Levites, shall be porters of the doors;
5Moontil orupangu raajaavin aramanaiyaiyum, moontil orupangu asthipaara vaasalaiyum kaakkavum, janangalellaam karththarutaiya aalayap piraakaarangalil irukkavum vaenndum.And a third part shall be at the king's house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of the LORD.
6Aasaariyarum laeviyaril ooliyamseykiravarkalum thavira, oruvarum karththarutaiya aalayaththirkul piravaesikkavaenndaam; avarkalae utpiravaesippaarkalaaka; avarkal Parisuththamaakkappattavarkal; janangalellaarum karththarutaiya kaavalaik kaappaarkalaaka.But let none come into the house of the LORD, save the priests, and they that minister of the Levites; they shall go in, for they are holy: but all the people shall keep the watch of the LORD.
7Laeviyar avaravar thangal aayuthangalaith thangal kaiyilae pitiththukkonndavarkalaay, raajaavaich suttilum varisaiyaay nintukonntirukkavaenndum; aalayaththukkutpadukira evanum kolaiseyyappadakkadavan; raajaa utpiravaesikkirapothum veliyae purappadukirapothum neengal avarotae irungal entan.And the Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whosoever else cometh into the house, he shall be put to death: but be ye with the king when he cometh in, and when he goeth out.
8Aasaariyanaakiya yoythaa kattalaiyittapatiyellaam laeviyarum yoothaakoththiraththaar anaivarum seythu, avaravar avvaaraththu muraippati varukiravarkalum, muraitheernthu pokiravarkalumaana thamtham manusharaik koottikkonnduponaarkal; vakuppukal pirinthupoka aasaariyanaakiya yoythaa uththaravukodukkavillai.So the Levites and all Judah did according to all things that Jehoiada the priest had commanded, and took every man his men that were to come in on the sabbath, with them that were to go out on the sabbath: for Jehoiada the priest dismissed not the courses.
9Davidraajaa thaevanutaiya aalayaththil vaiththiruntha eettikalaiyum kaedakangalaiyum parisaikalaiyum aasaariyanaakiya yoythaa nooraுpaerukku athipathiyinidaththil koduththu,Moreover Jehoiada the priest delivered to the captains of hundreds spears, and bucklers, and shields, that had been king David's, which were in the house of God.
10Avaravar thangal aayuthangalaik kaiyilae pitiththukkonndavarkalaay aalayaththin valathupakkanthodangi, aalayaththin idathupakkamattum, palipeedaththirkum aalayaththirkum ethirae raajaavaich suttilum nirka janangalaiyellaam niraுththinaan.And he set all the people, every man having his weapon in his hand, from the right side of the temple to the left side of the temple, along by the altar and the temple, by the king round about.
11Pinpu raajakumaaranai veliyae konnduvanthu, kireedaththai avanmael vaiththu, saatchiyin aakamaththai avan kaiyilae koduththu, avanai raajaavaakkinaarkal; yoythaavum avan kumaararum avanai apishaekampannnni, raajaa vaalka entarkal.Then they brought out the king's son, and put upon him the crown, and gave him the testimony, and made him king. And Jehoiada and his sons anointed him, and said, God save the king.
12Janangal otivanthu, raajaavaip pukalukira saththaththai aththaaliyaal kaettapothu, aval karththarutaiya aalayaththirku janangalidaththil vanthu,Now when Athaliah heard the noise of the people running and praising the king, she came to the people into the house of the LORD:
13Itho, nataiyilulla thannutaiya thoonanntaiyilae raajaa nirkirathaiyum, raajaavanntaiyil nirkira pirapukkalaiyum, ekkaalam oothukiravarkalaiyum, thaesaththu janangalellaarum santhoshappattu ekkaalangal oothukirathaiyum, geethavaaththiyangalaip pitiththukkonndu paadakarum sangaீthaththalaivarum thuthikkirathaiyum kanndaal; appoluthu aththaaliyaal than vasthirangalaik kiliththukkonndu thurokam thurokam entu koovinaal.And she looked, and, behold, the king stood at his pillar at the entering in, and the princes and the trumpets by the king: and all the people of the land rejoiced, and sounded with trumpets, also the singers with instruments of music, and such as taught to sing praise. Then Athaliah rent her clothes, and said, Treason, Treason.
14Aasaariyanaakiya yoythaa iraanuvaththalaivanaakiya nooraுpaerukku athipathikalaanavarkalai veliyae alaiththu, avarkalai Nnokki: ivalai varisaikkuppurampae konndupongal; ivalaip pinpattaுkiravanaip pattayaththaal vettippodungal entan. Karththarin aalayaththilae avalaik kontupodaathaeyungal entu aasaariyan solliyirunthaan.Then Jehoiada the priest brought out the captains of hundreds that were set over the host, and said unto them, Have her forth of the ranges: and whoso followeth her, let him be slain with the sword. For the priest said, Slay her not in the house of the LORD.
15Avarkal avalukku idamunndaakkinapothu, aval raajaavin aramanaiyilirukkira kuthiraikalin vaasalukkul piravaesikkum idamattum ponaal; angae avalaik kontupottarkal.So they laid hands on her; and when she was come to the entering of the horse gate by the king's house, they slew her there.
16Appoluthu yoythaa thaangal karththarutaiya janamaayirukkumpatikku, thaanum sakala janangalum raajaavum udanpatikkai pannnnikkollumpati seythaan.And Jehoiada made a covenant between him, and between all the people, and between the king, that they should be the LORD's people.
17Appoluthu janangalellaarum paakaalin kovilukkup poy, athai itiththu, athin palipeedangalaiyum, athin vikkirakangalaiyum thakarththu, paakaalin poosaasaariyaakiya maaththaanaip palipeedangalukku munpaakak kontupottarkal.Then all the people went to the house of Baal, and brake it down, and brake his altars and his images in pieces, and slew Mattan the priest of Baal before the altars.
18David kattalaiyittapirakaaram santhoshaththodum sangaீthaththodum karththarin sarvaanga thakanapalikalai Mosesyin niyaayappiramaanaththil eluthiyirukkirapatiyae seluththaththakkathaaka, yoythaa karththarutaiya aalayaththai visaarikkum uththiyokangalaith David karththarutaiya aalayaththukkentu pakuththuvaiththa laeviyaraana aasaariyarkalin kaiyil oppuviththu,Also Jehoiada appointed the offices of the house of the LORD by the hand of the priests the Levites, whom David had distributed in the house of the LORD, to offer the burnt offerings of the LORD, as it is written in the law of Moses, with rejoicing and with singing, as it was ordained by David.
19Yaathoru kaariyaththinaal theettuppattavan karththarutaiya aalayaththirkul piravaesiyaathapatikku, athin vaasalkalukkuk kaavalaalarai niraுththinaan.And he set the porters at the gates of the house of the LORD, that none which was unclean in any thing should enter in.
20Nooraுpaerukku athipathikalaiyum, periyavarkalaiyum, janaththai aalukiravarkalaiyum, thaesaththu samastha janangalaiyum koottikkonndu, raajaavaik karththarutaiya aalayaththilirunthu irangappannnni, uyarntha vaasalvaliyaay raaja aramanaikkul alaiththuvanthu arasaalum singaasanaththinmael raajaavai utkaarappannnninaarkal.And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of the LORD: and they came through the high gate into the king's house, and set the king upon the throne of the kingdom.
21Thaesaththu janangalellaarum makilnthaarkal, aththaaliyaalai pattayaththaal kontapinpu nakaram amarikkaiyaayittaு.And all the people of the land rejoiced: and the city was quiet, after that they had slain Athaliah with the sword.