அப்போஸ்தலர் 18:23
அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.
Tamil Indian Revised Version
அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
பவுல் அந்தியோகியாவில் சிலகாலம் தங்கியிருந்தான். பின் அவன் கலாத்தியா, பிரிகியா நாடுகள் வழியாகச் சென்றான். இந்நாடுகளில் பவுல் ஊர் ஊராகப் பயணம் செய்தான். அவன் இயேசுவின் சீஷர்கள் அனைவரையும் பலப்படுத்தினான்.
Thiru Viviliam
சிறிது காலம் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.
Other Title
- மூன்றாம் தூதுரைப் பயணம் -
King James Version (KJV)
And after he had spent some time there, he departed, and went over all the country of Galatia and Phrygia in order, strengthening all the disciples.
American Standard Version (ASV)
And having spent some time `there’, he departed, and went through the region of Galatia, and Phrygia, in order, establishing all the disciples.
Bible in Basic English (BBE)
And having been there for some time, he went through the country of Galatia and Phrygia in order, making the disciples strong in the faith.
Darby English Bible (DBY)
And having stayed [there] some time, he went forth, passing in order through the country of Galatia and Phrygia, establishing all the disciples.
World English Bible (WEB)
Having spent some time there, he departed, and went through the region of Galatia, and Phrygia, in order, establishing all the disciples.
Young’s Literal Translation (YLT)
And having made some stay he went forth, going through in order the region of Galatia and Phrygia, strengthening all the disciples.
அப்போஸ்தலர் Acts 18:23
அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.
And after he had spent some time there, he departed, and went over all the country of Galatia and Phrygia in order, strengthening all the disciples.
| καὶ | kai | kay | |
| ποιήσας | poiēsas | poo-A-sahs | |
| χρόνον | chronon | HROH-none | |
| τινὰ | tina | tee-NA | |
| ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane | |
| διερχόμενος | dierchomenos | thee-are-HOH-may-nose | |
| καθεξῆς | kathexēs | ka-thay-KSASE | |
| τὴν | tēn | tane | |
| Γαλατικὴν | galatikēn | ga-la-tee-KANE | |
| χώραν | chōran | HOH-rahn | |
| καὶ | kai | kay | |
| Φρυγίαν | phrygian | fryoo-GEE-an | |
| ἐπιστηρίζων | epistērizōn | ay-pee-stay-REE-zone | |
| πάντας | pantas | PAHN-tahs | |
| τοὺς | tous | toos | |
| μαθητάς | mathētas | ma-thay-TAHS |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41
சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32
யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;
1 தெசலோனிக்கேயர் 5:14
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
எபிரெயர் 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
1 தெசலோனிக்கேயர் 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 3:2
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
கலாத்தியர் 4:14
அப்படியிருந்தும் என் சரீரத்திலுண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
கலாத்தியர் 1:2
என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:40
அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.
லுூக்கா 22:43
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
லுூக்கா 22:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.
தானியேல் 11:1
மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
எஸ்றா 1:6
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
உபாகமம் 3:28
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.
Tags அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு புறப்பட்டு கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்
Acts 18:23 in Tamil Concordance Acts 18:23 in Tamil Interlinear Acts 18:23 in Tamil Image