Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 12:19 in Tamil

Home Bible Acts Acts 12 Acts 12:19

அப்போஸ்தலர் 12:19
ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெயύது, அவர்களைக் கொலைசெய்யும்ʠΟி கட்டளையிட்டு, பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான்.

Tamil Easy Reading Version
ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான். பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான்.

Thiru Viviliam
ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் செய்தான். அவரைக் காணாததால் காவலரை விசாரித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான். பின்பு பேதுரு யூதாயாவைவிட்டுச் செசரியா சென்று அங்கே தங்கினார்.

Acts 12:18Acts 12Acts 12:20

King James Version (KJV)
And when Herod had sought for him, and found him not, he examined the keepers, and commanded that they should be put to death. And he went down from Judaea to Caesarea, and there abode.

American Standard Version (ASV)
And when Herod had sought for him, and found him not, he examined the guards, and commanded that they should be put to death. And he went down from Judaea to Caesarea, and tarried there.

Bible in Basic English (BBE)
And Herod, when he sent for him, and he was not there, after questioning the watchmen, gave orders that they were to be put to death. Then he went down from Judaea to Caesarea for a time.

Darby English Bible (DBY)
And Herod having sought him and not found him, having examined the guards, commanded [them] to be executed. And he went down from Judaea to Caesarea and stayed [there].

World English Bible (WEB)
When Herod had sought for him, and didn’t find him, he examined the guards, and commanded that they should be put to death. He went down from Judea to Caesarea, and stayed there.

Young’s Literal Translation (YLT)
and Herod having sought for him, and not having found, having examined the guards, did command `them’ to be led away to punishment, and having gone down from Judea to Cesarea, he was abiding `there’.

அப்போஸ்தலர் Acts 12:19
ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெயύது, அவர்களைக் கொலைசெய்யும்ʠΟி கட்டளையிட்டு, பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
And when Herod had sought for him, and found him not, he examined the keepers, and commanded that they should be put to death. And he went down from Judaea to Caesarea, and there abode.

Ἡρῴδηςhērōdēsay-ROH-thase
δὲdethay
ἐπιζητήσαςepizētēsasay-pee-zay-TAY-sahs
αὐτὸνautonaf-TONE
καὶkaikay
μὴmay
εὑρὼνheurōnave-RONE
ἀνακρίναςanakrinasah-na-KREE-nahs
τοὺςtoustoos
φύλακαςphylakasFYOO-la-kahs
ἐκέλευσενekeleusenay-KAY-layf-sane
ἀπαχθῆναιapachthēnaiah-pahk-THAY-nay
καὶkaikay
κατελθὼνkatelthōnka-tale-THONE
ἀπὸapoah-POH
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
εἰςeisees
τὴνtēntane
Καισάρειανkaisareiankay-SA-ree-an
διέτριβενdietribenthee-A-tree-vane

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27
சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:42
அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:13
சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:8
மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6
ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4
அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்

யோவான் 12:10
லாசருவினிமித்தமாக யூதர்களில் அநχகர் போய், இயேசுவினிடத͠Τில் விசுவாசம் வைத்தபடியால்,

மத்தேயு 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.

மத்தேயு 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

மத்தேயு 2:13
அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.

தானியேல் 2:11
ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

எரேமியா 36:26
பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.

சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

எஸ்தர் 6:12
பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.

1 இராஜாக்கள் 20:43
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

1 சாமுவேல் 23:14
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.


Tags ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது காவற்காரரை விசாரணைசெயύது அவர்களைக் கொலைசெய்யும்ʠΟி கட்டளையிட்டு பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய் அங்கே வாசம்பண்ணினான்
Acts 12:19 in Tamil Concordance Acts 12:19 in Tamil Interlinear Acts 12:19 in Tamil Image