பிலிப்பியர் 1:22
ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
Tamil Indian Revised Version
ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
Tamil Easy Reading Version
இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை.
Thiru Viviliam
எனினும், நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே, நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை.
King James Version (KJV)
But if I live in the flesh, this is the fruit of my labour: yet what I shall choose I wot not.
American Standard Version (ASV)
But if to live in the flesh, –`if’ this shall bring fruit from my work, then what I shall choose I know not.
Bible in Basic English (BBE)
But if I go on living in the flesh–if this is the fruit of my work–then I do not see what decision to make.
Darby English Bible (DBY)
but if to live in flesh [is my lot], this is for me worth the while: and what I shall choose I cannot tell.
World English Bible (WEB)
But if I live on in the flesh, this will bring fruit from my work; yet I don’t make known what I will choose.
Young’s Literal Translation (YLT)
And if to live in the flesh `is’ to me a fruit of work, then what shall I choose? I know not;
பிலிப்பியர் Philippians 1:22
ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
But if I live in the flesh, this is the fruit of my labour: yet what I shall choose I wot not.
| εἰ | ei | ee | |
| δὲ | de | thay | |
| τὸ | to | toh | |
| ζῆν | zēn | zane | |
| ἐν | en | ane | |
| σαρκί | sarki | sahr-KEE | |
| τοῦτό | touto | TOO-TOH | |
| μοι | moi | moo | |
| καρπὸς | karpos | kahr-POSE | |
| ἔργου | ergou | ARE-goo | |
| καὶ | kai | kay | |
| τί | ti | tee | |
| αἱρήσομαι | hairēsomai | ay-RAY-soh-may | |
| οὐ | ou | oo | |
| γνωρίζω | gnōrizō | gnoh-REE-zoh |
Cross Reference
கொலோசெயர் 2:1
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.
1 பேதுரு 4:2
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
பிலிப்பியர் 1:24
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 10:3
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
ரோமர் 11:2
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:17
சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமைனாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
ஏசாயா 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
சங்கீதம் 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
யாத்திராகமம் 32:1
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
ஆதியாகமம் 39:8
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
ஆதியாகமம் 21:26
அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
Tags ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால் நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்
Philippians 1:22 in Tamil Concordance Philippians 1:22 in Tamil Interlinear Philippians 1:22 in Tamil Image