Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 6:14 in Tamil

Home Bible Micah Micah 6 Micah 6:14

மீகா 6:14
நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Tamil Indian Revised Version
நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன்.

Tamil Easy Reading Version
நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது. நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும் இருப்பாய். நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி செய்வாய். யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Thiru Viviliam
⁽நீங்கள் உணவருந்தினாலும்␢ நிறைவடைய மாட்டீர்கள்;␢ பசி உங்கள் வயிற்றைக்␢ கிள்ளிக்கொண்டிருக்கும்;␢ நீங்கள் எதையும்␢ பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,␢ இழப்பீர்கள்;␢ அப்படியே நீங்கள் எதையாவது␢ பாதுகாப்பாக வைத்தாலும்␢ அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.⁾

Micah 6:13Micah 6Micah 6:15

King James Version (KJV)
Thou shalt eat, but not be satisfied; and thy casting down shall be in the midst of thee; and thou shalt take hold, but shalt not deliver; and that which thou deliverest will I give up to the sword.

American Standard Version (ASV)
Thou shalt eat, but not be satisfied; and thy humiliation shall be in the midst of thee: and thou shalt put away, but shalt not save; and that which thou savest will I give up to the sword.

Bible in Basic English (BBE)
You will have food, but not enough; your shame will be ever with you: you will get your goods moved, but you will not take them away safely; and what you do take away I will give to the sword.

Darby English Bible (DBY)
Thou shalt eat, and not be satisfied, and thine emptiness [shall remain] in the midst of thee; and thou shalt take away, and not save; and what thou savest will I give up to the sword.

World English Bible (WEB)
You shall eat, but not be satisfied. Your humiliation will be in your midst. You will store up, but not save; And that which you save I will give up to the sword.

Young’s Literal Translation (YLT)
Thou — thou eatest, and thou art not satisfied, And thy pit `is’ in thy midst, And thou removest, and dost not deliver, And that which thou deliverest, to a sword I give.

மீகா Micah 6:14
நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
Thou shalt eat, but not be satisfied; and thy casting down shall be in the midst of thee; and thou shalt take hold, but shalt not deliver; and that which thou deliverest will I give up to the sword.

אַתָּ֤הʾattâah-TA
תֹאכַל֙tōʾkaltoh-HAHL
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תִשְׂבָּ֔עtiśbāʿtees-BA
וְיֶשְׁחֲךָ֖wĕyešḥăkāveh-yesh-huh-HA
בְּקִרְבֶּ֑ךָbĕqirbekābeh-keer-BEH-ha
וְתַסֵּג֙wĕtassēgveh-ta-SAɡE
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תַפְלִ֔יטtaplîṭtahf-LEET
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
תְּפַלֵּ֖טtĕpallēṭteh-fa-LATE
לַחֶ֥רֶבlaḥerebla-HEH-rev
אֶתֵּֽן׃ʾettēneh-TANE

Cross Reference

ஓசியா 4:10
அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள்.

லேவியராகமம் 26:26
உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்

ஆகாய் 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.

ஆகாய் 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

ஆமோஸ் 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

ஆமோஸ் 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

எசேக்கியேல் 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

எசேக்கியேல் 4:16
பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,

எரேமியா 48:44
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

ஏசாயா 30:6
தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

ஏசாயா 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

ஏசாயா 9:20
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.

ஏசாயா 3:6
அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;

உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.


Tags நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய் உனக்குள்ளே சோர்வுண்டாகும் நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்
Micah 6:14 in Tamil Concordance Micah 6:14 in Tamil Interlinear Micah 6:14 in Tamil Image