மீகா 2:7
யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
Tamil Indian Revised Version
யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
Tamil Easy Reading Version
ஆனால் யாக்கோபின் ஜனங்களே, நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும். கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் சரியானபடி வாழ்ந்தால் பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.
Thiru Viviliam
⁽யாக்கோபின் குடும்பத்தாரே,␢ ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?␢ இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?␢ நேர்மையாய் நடப்போரிடம்␢ அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’⁾
King James Version (KJV)
O thou that art named the house of Jacob, is the spirit of the LORD straitened? are these his doings? do not my words do good to him that walketh uprightly?
American Standard Version (ASV)
Shall it be said, O house of Jacob, Is the Spirit of Jehovah straitened? are these his doings? Do not my words do good to him that walketh uprightly?
Bible in Basic English (BBE)
Is the Lord quickly made angry? are these his doings? do not his words do good to his people Israel?
Darby English Bible (DBY)
O thou [that art] named the house of Jacob, Is Jehovah impatient? are these his doings? Do not my words do good to him that walketh uprightly?
World English Bible (WEB)
Shall it be said, O house of Jacob: “Is the Spirit of Yahweh angry? Are these his doings? Don’t my words do good to him who walks blamelessly?”
Young’s Literal Translation (YLT)
Doth the house of Jacob say, `Hath the Spirit of Jehovah been shortened? Are these His doings?’ Do not My words benefit the people that is walking uprightly?
மீகா Micah 2:7
யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
O thou that art named the house of Jacob, is the spirit of the LORD straitened? are these his doings? do not my words do good to him that walketh uprightly?
| הֶאָמ֣וּר | heʾāmûr | heh-ah-MOOR | |
| בֵּֽית | bêt | bate | |
| יַעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| הֲקָצַר֙ | hăqāṣar | huh-ka-TSAHR | |
| ר֣וּחַ | rûaḥ | ROO-ak | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אִם | ʾim | eem | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| מַעֲלָלָ֑יו | maʿălālāyw | ma-uh-la-LAV | |
| הֲל֤וֹא | hălôʾ | huh-LOH | |
| דְבָרַ֨י | dĕbāray | deh-va-RAI | |
| יֵיטִ֔יבוּ | yêṭîbû | yay-TEE-voo | |
| עִ֖ם | ʿim | eem | |
| הַיָּשָׁ֥ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| הוֹלֵֽךְ׃ | hôlēk | hoh-LAKE |
Cross Reference
சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 15:2
உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
எரேமியா 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
ஏசாயா 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
மீகா 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
யோவான் 8:39
அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
ரோமர் 2:28
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
ரோமர் 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
ரோமர் 9:6
தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
2 கொரிந்தியர் 6:12
எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
2 தீமோத்தேயு 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
ஓசியா 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
எரேமியா 2:4
யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
ஏசாயா 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
சங்கீதம் 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:65
கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
சங்கீதம் 119:70
அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
சங்கீதம் 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
சங்கீதம் 119:99
உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
நீதிமொழிகள் 2:7
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 10:9
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
நீதிமொழிகள் 14:2
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 28:18
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
ஏசாயா 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
எண்ணாகமம் 11:23
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
Tags யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ அவருடைய கிரியைகள் இவைகள்தானோ செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ
Micah 2:7 in Tamil Concordance Micah 2:7 in Tamil Interlinear Micah 2:7 in Tamil Image