ஆமோஸ் 5:7
நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.
Tamil Indian Revised Version
நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும். தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார். அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார். அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார். அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார். அவரது நாமம் யேகோவா. அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.” நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள். நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.
Thiru Viviliam
⁽அவர்கள் நீதியை␢ எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்;␢ நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.⁾
King James Version (KJV)
Ye who turn judgment to wormwood, and leave off righteousness in the earth,
American Standard Version (ASV)
Ye who turn justice to wormwood, and cast down righteousness to the earth,
Bible in Basic English (BBE)
You who make the work of judging a bitter thing, crushing down righteousness to the earth;
Darby English Bible (DBY)
Ye who turn judgment to wormwood, and cast down righteousness to the earth,
World English Bible (WEB)
You who turn justice to wormwood, And cast down righteousness to the earth:
Young’s Literal Translation (YLT)
Ye who are turning to wormwood judgment, And righteousness to the earth have put down,
ஆமோஸ் Amos 5:7
நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.
Ye who turn judgment to wormwood, and leave off righteousness in the earth,
| הַהֹפְכִ֥ים | hahōpĕkîm | ha-hoh-feh-HEEM | |
| לְלַעֲנָ֖ה | lĕlaʿănâ | leh-la-uh-NA | |
| מִשְׁפָּ֑ט | mišpāṭ | meesh-PAHT | |
| וּצְדָקָ֖ה | ûṣĕdāqâ | oo-tseh-da-KA | |
| לָאָ֥רֶץ | lāʾāreṣ | la-AH-rets | |
| הִנִּֽיחוּ׃ | hinnîḥû | hee-NEE-hoo |
Cross Reference
ஆமோஸ் 6:12
ஒரு கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.
செப்பனியா 1:6
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
ஓசியா 10:4
பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
ஆபகூக் 1:12
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
ஆமோஸ் 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
எசேக்கியேல் 33:18
நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
எசேக்கியேல் 33:12
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
எசேக்கியேல் 18:24
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவனோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
எசேக்கியேல் 3:20
அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
ஏசாயா 59:13
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
ஏசாயா 10:1
ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.
ஏசாயா 1:23
உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
சங்கீதம் 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.
சங்கீதம் 36:3
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.
உபாகமம் 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
Tags நியாயத்தை எட்டியாக மாற்றி நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்
Amos 5:7 in Tamil Concordance Amos 5:7 in Tamil Interlinear Amos 5:7 in Tamil Image