Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 27:5 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 27 Ezekiel 27:5

எசேக்கியேல் 27:5
சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள். லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால் பாய்மரங்களைச் செய்தார்கள்.

Thiru Viviliam
⁽செனீரிலிருந்து வந்த␢ தேவதாரு மரங்களால்␢ உனக்குப் பலகைகள் செய்தனர்;␢ லெபனோனின் கேதுரு மரத்தால்␢ உனக்குப் பாய்மரம் அமைத்தனர்.⁾

Ezekiel 27:4Ezekiel 27Ezekiel 27:6

King James Version (KJV)
They have made all thy ship boards of fir trees of Senir: they have taken cedars from Lebanon to make masts for thee.

American Standard Version (ASV)
They have made all thy planks of fir-trees from Senir; they have taken a cedar from Lebanon to make a mast for thee.

Bible in Basic English (BBE)
They have made all your boards of fir-trees from Senir: they have taken cedars from Lebanon to make the supports for your sails.

Darby English Bible (DBY)
They made all thy double boards of cypress-trees of Senir; they took cedars from Lebanon to make masts for thee.

World English Bible (WEB)
They have made all your planks of fir trees from Senir; they have taken a cedar from Lebanon to make a mast for you.

Young’s Literal Translation (YLT)
Of firs of Senir they have built to thee all thy double-boarded ships, Of cedars of Lebanon they have taken to make a mast for thee,

எசேக்கியேல் Ezekiel 27:5
சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
They have made all thy ship boards of fir trees of Senir: they have taken cedars from Lebanon to make masts for thee.

בְּרוֹשִׁ֤יםbĕrôšîmbeh-roh-SHEEM
מִשְּׂנִיר֙miśśĕnîrmee-seh-NEER
בָּ֣נוּbānûBA-noo
לָ֔ךְlāklahk
אֵ֖תʾētate
כָּלkālkahl
לֻֽחֹתָ֑יִםluḥōtāyimloo-hoh-TA-yeem
אֶ֤רֶזʾerezEH-rez
מִלְּבָנוֹן֙millĕbānônmee-leh-va-NONE
לָקָ֔חוּlāqāḥûla-KA-hoo
לַעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
תֹּ֖רֶןtōrenTOH-ren
עָלָֽיִךְ׃ʿālāyikah-LA-yeek

Cross Reference

உபாகமம் 3:9
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.

உன்னதப்பாட்டு 4:8
லீபனோனிலிருந்து என்னோடே வா. என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.

1 இராஜாக்கள் 5:1
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

1 இராஜாக்கள் 5:6
ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.

சங்கீதம் 29:5
கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

சங்கீதம் 104:16
கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.

ஏசாயா 14:8
தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும் உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்துகிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.


Tags சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள் பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்
Ezekiel 27:5 in Tamil Concordance Ezekiel 27:5 in Tamil Interlinear Ezekiel 27:5 in Tamil Image