Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 13:13 in Tamil

Home Bible Isaiah Isaiah 13 Isaiah 13:13

ஏசாயா 13:13
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
இதனால் சேனைகளின் கர்த்தருடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.

Tamil Easy Reading Version
எனது கோபத்தால் வானத்தை நடுங்கவைப்பேன். பூமி தன் இடத்திலிருந்து நகரும்”. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் கோபத்தைக் காட்டும் நாளில் இவை அனைத்தும் நிறைவேறும்.

Thiru Viviliam
⁽ஆதலால், வானத்தை␢ நடுங்கச் செய்வேன்;␢ மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து␢ ஆட்டங் கொடுக்கும்;␢ படைகளின் ஆண்டவரது கோபத்தால்␢ அவரது கடும்சினத்தின் நாளில்␢ இது நடக்கும்.⁾

Isaiah 13:12Isaiah 13Isaiah 13:14

King James Version (KJV)
Therefore I will shake the heavens, and the earth shall remove out of her place, in the wrath of the LORD of hosts, and in the day of his fierce anger.

American Standard Version (ASV)
Therefore I will make the heavens to tremble, and the earth shall be shaken out of its place, in the wrath of Jehovah of hosts, and in the day of his fierce anger.

Bible in Basic English (BBE)
For this cause the heavens will be shaking, and the earth will be moved out of its place, in the wrath of the Lord of armies, and in the day of his burning passion.

Darby English Bible (DBY)
Therefore I will make the heavens to shake, and the earth shall be removed out of her place, at the wrath of Jehovah of hosts, and in the day of his fierce anger.

World English Bible (WEB)
Therefore I will make the heavens to tremble, and the earth shall be shaken out of its place, in the wrath of Yahweh of hosts, and in the day of his fierce anger.

Young’s Literal Translation (YLT)
Therefore the heavens I cause to tremble, And the earth doth shake from its place, In the wrath of Jehovah of Hosts, And in a day of the heat of his anger.

ஏசாயா Isaiah 13:13
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.
Therefore I will shake the heavens, and the earth shall remove out of her place, in the wrath of the LORD of hosts, and in the day of his fierce anger.

עַלʿalal
כֵּן֙kēnkane
שָׁמַ֣יִםšāmayimsha-MA-yeem
אַרְגִּ֔יזʾargîzar-ɡEEZ
וְתִרְעַ֥שׁwĕtirʿašveh-teer-ASH
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
מִמְּקוֹמָ֑הּmimmĕqômāhmee-meh-koh-MA
בְּעֶבְרַת֙bĕʿebratbeh-ev-RAHT
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
וּבְי֖וֹםûbĕyômoo-veh-YOME
חֲר֥וֹןḥărônhuh-RONE
אַפּֽוֹ׃ʾappôah-poh

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 6:13
அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

2 பேதுரு 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

எபிரெயர் 12:26
அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

மத்தேயு 24:29
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

நாகூம் 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

யோவேல் 3:16
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

புலம்பல் 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.

எரேமியா 4:23
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

ஏசாயா 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

ஏசாயா 34:4
வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.

ஆகாய் 2:21
நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,

ஆகாய் 2:6
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.

சங்கீதம் 110:5
உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.


Tags இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்
Isaiah 13:13 in Tamil Concordance Isaiah 13:13 in Tamil Interlinear Isaiah 13:13 in Tamil Image