Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 2:17 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 2 Ecclesiastes 2:17

பிரசங்கி 2:17
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி.

Thiru Viviliam
எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.⒫

Title
வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி உண்டா?

Ecclesiastes 2:16Ecclesiastes 2Ecclesiastes 2:18

King James Version (KJV)
Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.

American Standard Version (ASV)
So I hated life, because the work that is wrought under the sun was grievous unto me; for all is vanity and a striving after wind.

Bible in Basic English (BBE)
So I was hating life, because everything under the sun was evil to me: all is to no purpose and desire for wind.

Darby English Bible (DBY)
And I hated life; for the work that is wrought under the sun was grievous unto me; for all is vanity and pursuit of the wind.

World English Bible (WEB)
So I hated life, because the work that is worked under the sun was grievous to me; for all is vanity and a chasing after wind.

Young’s Literal Translation (YLT)
And I have hated life, for sad to me `is’ the work that hath been done under the sun, for the whole `is’ vanity and vexation of spirit.

பிரசங்கி Ecclesiastes 2:17
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.

וְשָׂנֵ֙אתִי֙wĕśānēʾtiyveh-sa-NAY-TEE
אֶתʾetet
הַ֣חַיִּ֔יםhaḥayyîmHA-ha-YEEM
כִּ֣יkee
רַ֤עraʿra
עָלַי֙ʿālayah-LA
הַֽמַּעֲשֶׂ֔הhammaʿăśeha-ma-uh-SEH
שֶׁנַּעֲשָׂ֖הšennaʿăśâsheh-na-uh-SA
תַּ֣חַתtaḥatTA-haht
הַשָּׁ֑מֶשׁhaššāmešha-SHA-mesh
כִּֽיkee
הַכֹּ֥לhakkōlha-KOLE
הֶ֖בֶלhebelHEH-vel
וּרְע֥וּתûrĕʿûtoo-reh-OOT
רֽוּחַ׃rûaḥROO-ak

Cross Reference

பிரசங்கி 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

ஆபகூக் 1:3
நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

யோனா 4:3
இப்போதும் கர்த்தாவே, என்பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

எசேக்கியேல் 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

எரேமியா 20:14
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

பிரசங்கி 6:9
ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

பிரசங்கி 4:2
ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

பிரசங்கி 3:16
பின்மாரிக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.

பிரசங்கி 2:22
மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?

பிரசங்கி 1:14
சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

சங்கீதம் 89:47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?

யோபு 14:13
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.

யோபு 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.

யோபு 3:20
மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,

1 இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரபாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

எண்ணாகமம் 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.


Tags ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது
Ecclesiastes 2:17 in Tamil Concordance Ecclesiastes 2:17 in Tamil Interlinear Ecclesiastes 2:17 in Tamil Image