சங்கீதம் 45:14
சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
மணமகள் அழகிய ஆடையணிந்து அரசனிடம் அழைத்துவரப்பட்டாள். மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
Thiru Viviliam
⁽பலவண்ணப் பட்டுடுத்தி␢ மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;␢ கன்னித் தோழியர் புடைசூழ␢ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.⁾
King James Version (KJV)
She shall be brought unto the king in raiment of needlework: the virgins her companions that follow her shall be brought unto thee.
American Standard Version (ASV)
She shall be led unto the king in broidered work: The virgins her companions that follow her Shall be brought unto thee.
Bible in Basic English (BBE)
She will come before the king in robes of needlework; the virgins in her train will come before you.
Darby English Bible (DBY)
She shall be brought unto the king in raiment of embroidery; the virgins behind her, her companions, shall be brought in unto thee:
Webster’s Bible (WBT)
The king’s daughter is all glorious within: her clothing is of wrought gold.
World English Bible (WEB)
She shall be led to the king in embroidered work. The virgins, her companions who follow her, shall be brought to you.
Young’s Literal Translation (YLT)
In divers colours she is brought to the king, Virgins — after her — her companions, Are brought to thee.
சங்கீதம் Psalm 45:14
சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
She shall be brought unto the king in raiment of needlework: the virgins her companions that follow her shall be brought unto thee.
| לִרְקָמוֹת֮ | lirqāmôt | leer-ka-MOTE | |
| תּוּבַ֪ל | tûbal | too-VAHL | |
| לַ֫מֶּ֥לֶךְ | lammelek | LA-MEH-lek | |
| בְּתוּל֣וֹת | bĕtûlôt | beh-too-LOTE | |
| אַ֭חֲרֶיהָ | ʾaḥărêhā | AH-huh-ray-ha | |
| רֵעוֹתֶ֑יהָ | rēʿôtêhā | ray-oh-TAY-ha | |
| מ֖וּבָא֣וֹת | mûbāʾôt | MOO-va-OTE | |
| לָֽךְ׃ | lāk | lahk |
Cross Reference
நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:1
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
யோவான் 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
உன்னதப்பாட்டு 8:13
தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
உன்னதப்பாட்டு 6:13
திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.
உன்னதப்பாட்டு 6:8
ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.
உன்னதப்பாட்டு 6:1
உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.
உன்னதப்பாட்டு 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.
உன்னதப்பாட்டு 2:7
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
உன்னதப்பாட்டு 1:3
உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
யாத்திராகமம் 28:39
மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.
Tags சித்திரத்தையலாடை தரித்தவளாய் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள் அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்
Psalm 45:14 in Tamil Concordance Psalm 45:14 in Tamil Interlinear Psalm 45:14 in Tamil Image