2 இராஜாக்கள் 15:5
கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது மகனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.
Thiru Viviliam
எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே, அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.⒫
King James Version (KJV)
And the LORD smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king’s son was over the house, judging the people of the land.
American Standard Version (ASV)
And Jehovah smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a separate house. And Jotham the king’s son was over the household, judging the people of the land.
Bible in Basic English (BBE)
And the Lord sent disease on the king and he became a leper, and to the day of his death he was living separately in his private house. And Jotham his son was over his house, judging the people of the land.
Darby English Bible (DBY)
And Jehovah smote the king, so that he was a leper to the day of his death, and dwelt in a separate house. And Jotham the king’s son was over the house, judging the people of the land.
Webster’s Bible (WBT)
And the LORD smote the king, so that he was a leper to the day of his death, and dwelt in a separate house. And Jotham the king’s son was over the house, judging the people of the land.
World English Bible (WEB)
Yahweh struck the king, so that he was a leper to the day of his death, and lived in a separate house. Jotham the king’s son was over the household, judging the people of the land.
Young’s Literal Translation (YLT)
And Jehovah smiteth the king, and he is a leper unto the day of his death, and he dwelleth in a separate house, and Jotham son of the king `is’ over the house, judging the people of the land.
2 இராஜாக்கள் 2 Kings 15:5
கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
And the LORD smote the king, so that he was a leper unto the day of his death, and dwelt in a several house. And Jotham the king's son was over the house, judging the people of the land.
| וַיְנַגַּ֨ע | waynaggaʿ | vai-na-ɡA | |
| יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| הַמֶּ֗לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיְהִ֤י | wayhî | vai-HEE | |
| מְצֹרָע֙ | mĕṣōrāʿ | meh-tsoh-RA | |
| עַד | ʿad | ad | |
| י֣וֹם | yôm | yome | |
| מֹת֔וֹ | mōtô | moh-TOH | |
| וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE | |
| הַחָפְשִׁ֑ית | haḥopšît | ha-hofe-SHEET | |
| וְיוֹתָ֤ם | wĕyôtām | veh-yoh-TAHM | |
| בֶּן | ben | ben | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| עַל | ʿal | al | |
| הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet | |
| שֹׁפֵ֖ט | šōpēṭ | shoh-FATE | |
| אֶת | ʾet | et | |
| עַ֥ם | ʿam | am | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
லேவியராகமம் 13:46
அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
எண்ணாகமம் 12:14
கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.
சங்கீதம் 72:1
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
யோபு 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
2 நாளாகமம் 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
2 இராஜாக்கள் 7:3
குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?
2 இராஜாக்கள் 5:27
ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.
1 இராஜாக்கள் 3:28
ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
1 இராஜாக்கள் 3:9
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
2 சாமுவேல் 15:2
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
2 சாமுவேல் 8:15
இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.
2 சாமுவேல் 3:29
அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலும் ஒழிந்துபோகவதில்லை என்றான்.
உபாகமம் 24:8
குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
எண்ணாகமம் 12:10
மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.
Tags கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால் அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான் ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்
2 Kings 15:5 in Tamil Concordance 2 Kings 15:5 in Tamil Interlinear 2 Kings 15:5 in Tamil Image