Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Peter 3:3 in Tamil

Home Bible 2 Peter 2 Peter 3 2 Peter 3:3

2 பேதுரு 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

Tamil Indian Revised Version
முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,

Tamil Easy Reading Version
கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள்.

Thiru Viviliam
நீங்கள் முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவே: இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர்.

2 Peter 3:22 Peter 32 Peter 3:4

King James Version (KJV)
Knowing this first, that there shall come in the last days scoffers, walking after their own lusts,

American Standard Version (ASV)
knowing this first, that in the last days mockers shall come with mockery, walking after their own lusts,

Bible in Basic English (BBE)
Having first of all the knowledge that in the last days there will be men who, ruled by their evil desires, will make sport of holy things,

Darby English Bible (DBY)
knowing this first, that there shall come at [the] close of the days mockers with mocking, walking according to their own lusts,

World English Bible (WEB)
knowing this first, that in the last days mockers will come, walking after their own lusts,

Young’s Literal Translation (YLT)
this first knowing, that there shall come in the latter end of the days scoffers, according to their own desires going on,

2 பேதுரு 2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
Knowing this first, that there shall come in the last days scoffers, walking after their own lusts,

τοῦτοtoutoTOO-toh
πρῶτονprōtonPROH-tone
γινώσκοντεςginōskontesgee-NOH-skone-tase
ὅτιhotiOH-tee
ἐλεύσονταιeleusontaiay-LAYF-sone-tay
ἐπ'epape
ἐσχάτουeschatouay-SKA-too
τῶνtōntone
ἡμερῶνhēmerōnay-may-RONE
ἐμπαῖκταιempaiktaiame-PAKE-tay
κατὰkataka-TA
τὰςtastahs
ἰδίαςidiasee-THEE-as
αὐτῶνautōnaf-TONE
ἐπιθυμίαςepithymiasay-pee-thyoo-MEE-as
πορευόμενοιporeuomenoipoh-rave-OH-may-noo

Cross Reference

யூதா 1:18
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

2 பேதுரு 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

1 தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

யூதா 1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.

2 பேதுரு 1:20
வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

2 கொரிந்தியர் 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

ஏசாயா 29:20
கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

2 தீமோத்தேயு 3:1
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

ஓசியா 7:5
நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

ஏசாயா 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

நீதிமொழிகள் 14:6
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

நீதிமொழிகள் 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

ஏசாயா 5:19
நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

1 யோவான் 2:18
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.


Tags முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில் கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து
2 Peter 3:3 in Tamil Concordance 2 Peter 3:3 in Tamil Interlinear 2 Peter 3:3 in Tamil Image