2 நாளாகமம் 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
Tamil Indian Revised Version
சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள்.
Tamil Easy Reading Version
சீபா நாட்டு அரசி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன.
Thiru Viviliam
சேபாவின் அரசி சாலமோனின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, கடினமான வினாக்களால் அவரைச் சோதிக்க எருசலேம் வந்தார். பெரும் பரிவராத்தோடும், நறுமணப் பொருள்கள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்த ஒட்டகங்களோடும் அவர் வந்து சாலமோனைக் கண்டு, தம் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினார்.
Title
சீபா நாட்டு அரசி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்
Other Title
சேபா நாட்டு அரசியின் வருகை§(1 அர 10:1-13)
King James Version (KJV)
And when the queen of Sheba heard of the fame of Solomon, she came to prove Solomon with hard questions at Jerusalem, with a very great company, and camels that bare spices, and gold in abundance, and precious stones: and when she was come to Solomon, she communed with him of all that was in her heart.
American Standard Version (ASV)
And when the queen of Sheba heard of the fame of Solomon, she came to prove Solomon with hard questions at Jerusalem, with a very great train, and camels that bare spices, and gold in abundance, and precious stones: and when she was come to Solomon, she communed with him of all that was in her heart.
Bible in Basic English (BBE)
Now the queen of Sheba, hearing great things of Solomon, came to Jerusalem to put his wisdom to the test with hard questions; and with her came a very great train, and camels weighted down with spices, and great stores of gold and jewels: and when she came to Solomon she had talk with him of everything in her mind.
Darby English Bible (DBY)
And the queen of Sheba heard of the fame of Solomon, and came to Jerusalem to prove Solomon with enigmas; with a very great train, and camels that bore spices and gold in great abundance, and precious stones; and she came to Solomon, and spoke with him of all that was in her heart.
Webster’s Bible (WBT)
And when the queen of Sheba heard of the fame of Solomon, she came to prove Solomon with hard questions at Jerusalem, with a very great company, and camels that bore spices, and gold in abundance, and precious stones: and when she had come to Solomon, she communed with him of all that was in her heart.
World English Bible (WEB)
When the queen of Sheba heard of the fame of Solomon, she came to prove Solomon with hard questions at Jerusalem, with a very great train, and camels that bore spices, and gold in abundance, and precious stones: and when she was come to Solomon, she talked with him of all that was in her heart.
Young’s Literal Translation (YLT)
And the queen of Sheba hath heard of the fame of Solomon, and cometh in to try Solomon with acute sayings, to Jerusalem, with a very great company, and camels bearing spices and gold in abundance, and precious stone; and she cometh in unto Solomon, and speaketh with him all that hath been with her heart,
2 நாளாகமம் 2 Chronicles 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
And when the queen of Sheba heard of the fame of Solomon, she came to prove Solomon with hard questions at Jerusalem, with a very great company, and camels that bare spices, and gold in abundance, and precious stones: and when she was come to Solomon, she communed with him of all that was in her heart.
| וּמַֽלְכַּת | ûmalkat | oo-MAHL-kaht | |
| שְׁבָ֗א | šĕbāʾ | sheh-VA | |
| שָֽׁמְעָה֮ | šāmĕʿāh | sha-meh-AH | |
| אֶת | ʾet | et | |
| שֵׁ֣מַע | šēmaʿ | SHAY-ma | |
| שְׁלֹמֹה֒ | šĕlōmōh | sheh-loh-MOH | |
| וַתָּב֣וֹא | wattābôʾ | va-ta-VOH | |
| לְנַסּוֹת֩ | lĕnassôt | leh-na-SOTE | |
| אֶת | ʾet | et | |
| שְׁלֹמֹ֨ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| בְחִיד֜וֹת | bĕḥîdôt | veh-hee-DOTE | |
| בִּירֽוּשָׁלִַ֗ם | bîrûšālaim | bee-roo-sha-la-EEM | |
| בְּחַ֣יִל | bĕḥayil | beh-HA-yeel | |
| כָּבֵ֣ד | kābēd | ka-VADE | |
| מְאֹ֡ד | mĕʾōd | meh-ODE | |
| וּ֠גְמַלִּים | ûgĕmallîm | OO-ɡeh-ma-leem | |
| נֹֽשְׂאִ֨ים | nōśĕʾîm | noh-seh-EEM | |
| בְּשָׂמִ֧ים | bĕśāmîm | beh-sa-MEEM | |
| וְזָהָ֛ב | wĕzāhāb | veh-za-HAHV | |
| לָרֹ֖ב | lārōb | la-ROVE | |
| וְאֶ֣בֶן | wĕʾeben | veh-EH-ven | |
| יְקָרָ֑ה | yĕqārâ | yeh-ka-RA | |
| וַתָּבוֹא֙ | wattābôʾ | va-ta-VOH | |
| אֶל | ʾel | el | |
| שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| וַתְּדַבֵּ֣ר | wattĕdabbēr | va-teh-da-BARE | |
| עִמּ֔וֹ | ʿimmô | EE-moh | |
| אֵ֛ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הָיָ֖ה | hāyâ | ha-YA | |
| עִם | ʿim | eem | |
| לְבָבָֽהּ׃ | lĕbābāh | leh-va-VA |
Cross Reference
லுூக்கா 11:31
தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
மத்தேயு 12:42
தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
1 இராஜாக்கள் 10:1
கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
2 நாளாகமம் 9:9
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.
ஆதியாகமம் 10:7
கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள், ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
ஏசாயா 60:6
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.
மத்தேயு 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13:35
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
நீதிமொழிகள் 1:6
நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.
சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
ஆதியாகமம் 25:3
யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்
1 சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
1 இராஜாக்கள் 4:31
அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின்குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
2 நாளாகமம் 1:1
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
2 நாளாகமம் 1:12
ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
சங்கீதம் 49:4
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
சங்கீதம் 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
சங்கீதம் 72:15
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
சங்கீதம் 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
ஆதியாகமம் 10:28
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
Tags சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக மிகுந்த பரிவாரத்தோடும் கந்தவர்க்கங்களையும் மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள் அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்
2 Chronicles 9:1 in Tamil Concordance 2 Chronicles 9:1 in Tamil Interlinear 2 Chronicles 9:1 in Tamil Image