2 நாளாகமம் 5:2
பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
Tamil Indian Revised Version
பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் இருக்கிற மூத்தவர்களையும், எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் எருசலேமில் ஒன்றாகக் கூட்டினான். தாவீதின் நகரிலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரவே இவ்வாறு செய்தான். சீயோன் தாவீதின் நகரமாகும்.
Thiru Viviliam
பின்பு, சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ரயேலின் பெரியோர், எல்லாக் குலத் தலைவர்கள், இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரை எருசலேமில் ஒன்று கூட்டினார்.
Title
பரிசுத்தப் பெட்டி ஆலயத்திற்குள் கொண்டு வரப்படுகிறது
Other Title
உடன்படிக்கைப் பேழையைக் கோவிலுக்குக் கொணர்தல்§(1 அர 8:1-9)
King James Version (KJV)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, unto Jerusalem, to bring up the ark of the covenant of the LORD out of the city of David, which is Zion.
American Standard Version (ASV)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers’ `houses’ of the children of Israel, unto Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah out of the city of David, which is Zion.
Bible in Basic English (BBE)
Then Solomon sent for all the responsible men of Israel, all the chiefs of the tribes and the heads of families of the children of Israel, to come to Jerusalem and take the ark of the Lord’s agreement up out of the town of David, which is Zion.
Darby English Bible (DBY)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers of the children of Israel, to Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah out of the city of David, which is Zion.
Webster’s Bible (WBT)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, to Jerusalem, to bring up the ark of the covenant of the LORD from the city of David, which is Zion.
World English Bible (WEB)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers’ [houses] of the children of Israel, to Jerusalem, to bring up the ark of the covenant of Yahweh out of the city of David, which is Zion.
Young’s Literal Translation (YLT)
Then doth Solomon assemble the elders of Israel, and all the heads of the tribes, princes of the fathers of the sons of Israel, unto Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah from the city of David — it `is’ Zion.
2 நாளாகமம் 2 Chronicles 5:2
பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, unto Jerusalem, to bring up the ark of the covenant of the LORD out of the city of David, which is Zion.
| אָז֩ | ʾāz | az | |
| יַקְהֵ֨יל | yaqhêl | yahk-HALE | |
| שְׁלֹמֹ֜ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| אֶת | ʾet | et | |
| זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY | |
| יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| כָּל | kāl | kahl | |
| רָאשֵׁ֨י | rāʾšê | ra-SHAY | |
| הַמַּטּ֜וֹת | hammaṭṭôt | ha-MA-tote | |
| נְשִׂיאֵ֧י | nĕśîʾê | neh-see-A | |
| הָֽאָב֛וֹת | hāʾābôt | ha-ah-VOTE | |
| לִבְנֵ֥י | libnê | leev-NAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶל | ʾel | el | |
| יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| לְֽהַעֲל֞וֹת | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE | |
| אֶת | ʾet | et | |
| אֲר֧וֹן | ʾărôn | uh-RONE | |
| בְּרִית | bĕrît | beh-REET | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| מֵעִ֥יר | mēʿîr | may-EER | |
| דָּוִ֖יד | dāwîd | da-VEED | |
| הִ֥יא | hîʾ | hee | |
| צִיּֽוֹן׃ | ṣiyyôn | tsee-yone |
Cross Reference
2 சாமுவேல் 6:12
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
2 நாளாகமம் 1:4
தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் அங்கே இருந்தது.
சங்கீதம் 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
சங்கீதம் 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
2 நாளாகமம் 5:12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
2 நாளாகமம் 5:1
கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 நாளாகமம் 28:1
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
1 நாளாகமம் 26:26
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிகமான பிதாக்களின் தலைவரும், அதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
1 நாளாகமம் 24:31
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
1 நாளாகமம் 24:6
லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
1 நாளாகமம் 16:1
அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
1 நாளாகமம் 15:25
இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.
1 நாளாகமம் 15:12
அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.
1 இராஜாக்கள் 8:1
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
2 சாமுவேல் 5:7
ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
எண்ணாகமம் 10:36
அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.
எண்ணாகமம் 10:33
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.
Tags பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும் கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்
2 Chronicles 5:2 in Tamil Concordance 2 Chronicles 5:2 in Tamil Interlinear 2 Chronicles 5:2 in Tamil Image