12தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.Now David was the son of that Ephrathite of Bethlehemjudah, whose name was Jesse; and he had eight sons: and the man went among men for an old man in the days of Saul.
13ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.And the three eldest sons of Jesse went and followed Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the firstborn, and next unto him Abinadab, and the third Shammah.
14தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.And David was the youngest: and the three eldest followed Saul.
15தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.But David went and returned from Saul to feed his father's sheep at Bethlehem.
16அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
17ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,And Jesse said unto David his son, Take now for thy brethren an ephah of this parched corn, and these ten loaves, and run to the camp of thy brethren;
18இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.And carry these ten cheeses unto the captain of their thousand, and look how thy brethren fare, and take their pledge.
19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.Now Saul, and they, and all the men of Israel, were in the valley of Elah, fighting with the Philistines.
20தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the trench, as the host was going forth to the fight, and shouted for the battle.
21இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.For Israel and the Philistines had put the battle in array, army against army.
22அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.And David left his carriage in the hand of the keeper of the carriage, and ran into the army, and came and saluted his brethren.
23அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the armies of the Philistines, and spake according to the same words: and David heard them.
24இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.And all the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.
25அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.And the men of Israel said, Have ye seen this man that is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who killeth him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.
26அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.And David spake to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
27அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.And the people answered him after this manner, saying, So shall it be done to the man that killeth him.
28அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab's anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
29அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,And David said, What have I now done? Is there not a cause?
30அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.And he turned from him toward another, and spake after the same manner: and the people answered him again after the former manner.
31தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.And when the words were heard which David spake, they rehearsed them before Saul: and he sent for him.
32தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.And David said to Saul, Let no man's heart fail because of him; thy servant will go and fight with this Philistine.
33அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him: for thou art but a youth, and he a man of war from his youth.
34தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.And David said unto Saul, Thy servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:
35நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்த போது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்.And I went out after him, and smote him, and delivered it out of his mouth: and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.
36அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.Thy servant slew both the lion and the bear: and this uncircumcised Philistine shall be as one of them, seeing he hath defied the armies of the living God.
37பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.David said moreover, The LORD that delivered me out of the paw of the lion, and out of the paw of the bear, he will deliver me out of the hand of this Philistine. And Saul said unto David, Go, and the LORD be with thee.
38சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.And Saul armed David with his armor, and he put an helmet of brass upon his head; also he armed him with a coat of mail.
39அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,And David girded his sword upon his armor, and he assayed to go; for he had not proved it. And David said unto Saul, I cannot go with these; for I have not proved them. And David put them off him.
40தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in a shepherd's bag which he had, even in a scrip; and his sling was in his hand: and he drew near to the Philistine.
12David enpavan yoothaavilulla pethlekaem ooraanaakiya eesaay ennum paerulla eppiraaththiya manushanutaiya kumaaranaayirunthaan; eesaayukku ettukkumaarar irunthaarkal; ivan savulin naatkalilae matta janangalukkullae vayathusenta kilavanaay mathikkappattan.Now David was the son of that Ephrathite of Bethlehemjudah, whose name was Jesse; and he had eight sons: and the man went among men for an old man in the days of Saul.
13Eesaayinutaiya moontu mooththa kumaarar savulotaekooda yuththaththirkup poyirunthaarkal; yuththaththirkup poyiruntha avanutaiya moontu kumaararil mooththavanukku eliyaap entum, iranndaangumaaranukku apinathaap entum, moontangumaaranukkuch sammaa entum paer.And the three eldest sons of Jesse went and followed Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the firstborn, and next unto him Abinadab, and the third Shammah.
14David ellaarukkum ilaiyavan; mooththavarkalaakiya antha moontupaerum savulotaekoodap poyirunthaarkal.And David was the youngest: and the three eldest followed Saul.
15David savulaivittuth thirumpip poy pethlekaemilirukkira than thakappanutaiya aadukalai maeyththukkonntirunthaan.But David went and returned from Saul to feed his father's sheep at Bethlehem.
16Anthap pelisthan kaalaiyilum maalaiyilum naarpathunaal vanthuvanthu nirpaan.And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
17Eesaay than kumaaranaakiya thaaveethai Nnokki: un sakothararukku intha oru marakkaal varaுththa payattaைyum, inthap paththu appangalaiyum eduththukkonndu, paalayaththilirukkira un sakothararidaththil ottamaayp poy,And Jesse said unto David his son, Take now for thy brethren an ephah of this parched corn, and these ten loaves, and run to the camp of thy brethren;
18Inthap paththup paalkattikalai aayirampaerukku athipathiyaanavanidaththil koduththu, un sakotharar sukamaayirukkiraarkalaa entu visaariththu, avarkalidaththil ataiyaalam vaangik konnduvaa entan.And carry these ten cheeses unto the captain of their thousand, and look how thy brethren fare, and take their pledge.
19Appoluthu savulum, avarkalum, isravaelar ellaarum, aelaa pallaththaakkilae pelistharodu yuththampannnnikkonntirunthaarkal.Now Saul, and they, and all the men of Israel, were in the valley of Elah, fighting with the Philistines.
20David athikaalaiyil elunthu, aadukalaik kaavalaali vasamaay vittu, eesaay thanakkuk karpiththapatiyae eduththukkonndupoy, irathangal irukkira idaththilae vanthaan; senaikal annivakuththu nintu, yuththaththirkentu aarppariththaarkal.And David rose up early in the morning, and left the sheep with a keeper, and took, and went, as Jesse had commanded him; and he came to the trench, as the host was going forth to the fight, and shouted for the battle.
21Isravaelarum pelistharum oruvarukku ethiraaka oruvar annivakuththuk konntirunthaarkal.For Israel and the Philistines had put the battle in array, army against army.
22Appoluthu David: thaan konnduvanthavaikalai irakki, rasthukkalaik kaakkiravan vasamaaka vaiththu vittu, senaikkul oti, than sakothararaip paarththu: sukamaayirukkireerkalaa entu kaettan.And David left his carriage in the hand of the keeper of the carriage, and ran into the army, and came and saluted his brethren.
23Avan ivarkalotae paesikkonntirukkaiyil, itho, kaath ooraanaakiya koliyaath ennum paerulla anthap pelistha veeran pelistharin senaikalilirunthu elumpivanthu nintu, mun sonna vaarththaikalaiyae sonnaan; athaith David kaettan.And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the armies of the Philistines, and spake according to the same words: and David heard them.
24Isravaelar ellaarum antha manushanaik kaanumpothu mikavum payappattu, avan mukaththukku vilaki otippovaarkal.And all the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.
25Annaeraththilae isravaelar: vanthu nirkira antha manushanaik kannteerkalaa, isravaelai ninthikka vanthu nirkiraan; ivanaik kollukiravan evano, avanai raajaa mikavum aisuvariyavaanaakki, avanukkuth thammutaiya kumaaraththiyaith thanthu, avan thakappan veettarukku isravaelilae sarvamaaniyam koduppaar entarkal.And the men of Israel said, Have ye seen this man that is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who killeth him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.
26Appoluthu David thannanntaiyilae nirkiravarkalaip paarththu, inthap pelisthanaik kontu isravaelukku naeritta ninthaiyai neekkukiravanukku enna seyyappadum; jeevanulla thaevanutaiya senaikalai ninthikkiratharku viruththasethanam illaatha intha pelisthan emmaaththiram entan.And David spake to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
27Atharku janangal: avanaik kollukiravanukku inna innapati seyyappadum entu mun sonna vaarththaikalaiyae avanukkuch sonnaarkal.And the people answered him after this manner, saying, So shall it be done to the man that killeth him.
28Antha manusharotae avan paesikkonntirukkirathai avan mooththa sakotharanaakiya eliyaap kaettapothu, avan thaaveethinmael kopangaொnndu: nee ingae vanthathu enna? Vanaantharaththilulla anthak konja aadukalai nee yaar vasaththil vittay? Yuththaththaip paarkka allavaa vanthaay? Un thunnikaraththaiyum, un iruthayaththin akangaaraththaiyum naan arivaen entan.And Eliab his eldest brother heard when he spake unto the men; and Eliab's anger was kindled against David, and he said, Why camest thou down hither? and with whom hast thou left those few sheep in the wilderness? I know thy pride, and the naughtiness of thine heart; for thou art come down that thou mightest see the battle.
29Atharkuth David: naan ippoluthu seythathu enna? Naan vanthatharku mukaantharam illaiyaa entu solli,And David said, What have I now done? Is there not a cause?
30Avanai vittu, vaeroruvanidaththil thirumpi, anthappirakaaramaakavae kaettan; janangal munpolavae uththaravu sonnaarkal.And he turned from him toward another, and spake after the same manner: and the people answered him again after the former manner.
31David sonna vaarththaikalai avarkal kaettu, athaich savulin samukaththil ariviththaarkal; appoluthu avan avanai alaippiththaan.And when the words were heard which David spake, they rehearsed them before Saul: and he sent for him.
32David savulai Nnokki: ivanimiththam oruvanutaiya iruthayamum kalanga vaenntiyathillai; ummutaiya atiyaanaakiya naan poy, inthap pelisthanotae yuththampannnuvaen entan.And David said to Saul, Let no man's heart fail because of him; thy servant will go and fight with this Philistine.
33Appoluthu savul thaaveethai Nnokki: nee inthap pelisthanotae ethirththu yuththam pannna unnaal aakaathu; nee ilainjan, avano than siraு vayathumuthal yuththaveeran entan.And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him: for thou art but a youth, and he a man of war from his youth.
34David savulaippaarththu: ummutaiya atiyaan en thakappanutaiya aadukalai maeyththukkonntirukkira pothu, oruvisai oru singamum oru visai oru karatiyum vanthu, manthaiyilirukkira oru aattaைp pitiththukkonndathu.And David said unto Saul, Thy servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:
35Naan athaith thodarnthupoy, athai atiththu, athai athin vaaykkuth thappuviththaen; athu enmael paayntha pothu, naan athin thaatiyaip pitiththu, athai atiththuk kontupottaேn.And I went out after him, and smote him, and delivered it out of his mouth: and when he arose against me, I caught him by his beard, and smote him, and slew him.
36Anthach singaththaiyum anthak karatiyaiyum ummutaiya atiyaanaakiya naan konten; viruththasethanamillaatha inthap pelisthanum avaikalil ontaippola iruppaan; avan jeevanulla thaevanutaiya senaikalai ninthiththaanae entan.Thy servant slew both the lion and the bear: and this uncircumcised Philistine shall be as one of them, seeing he hath defied the armies of the living God.
37Pinnum David: ennaich singaththin kaikkum karatiyin kaikkum thappuviththa Karththar inthap pelisthanutaiya kaikkum thappuvippaar entan; appoluthu savul thaaveethaip paarththu: po, Karththar unnudanaekooda iruppaaraaka entan.David said moreover, The LORD that delivered me out of the paw of the lion, and out of the paw of the bear, he will deliver me out of the hand of this Philistine. And Saul said unto David, Go, and the LORD be with thee.
38Savul Davidkkuth than vasthirangalai uduththuviththu, vennkalamaana oru seeraavai avan thalaiyinmael pottu, oru kavasaththaiyum avanukkuth tharippiththaan.And Saul armed David with his armor, and he put an helmet of brass upon his head; also he armed him with a coat of mail.
39Avanutaiya pattayaththai David than vasthirangalmael kattikkonndu, athilae avanukkup palakkamillaathathinaal nadanthupaarththaan; appoluthu David savulai Nnokki: naan ivaikalaip pottukkonndu pokak koodaathu; intha appiyaasam enakku illai entu solli, avaikalaik kalainthupottu,And David girded his sword upon his armor, and he assayed to go; for he had not proved it. And David said unto Saul, I cannot go with these; for I have not proved them. And David put them off him.
40Than thatiyaik kaiyilae pitiththukkonndu, aattilirukkira janthu koolaangallukalaith therintheduththu, avaikalai maeypparukkuriya thannutaiya ataippappaiyilae pottu, than kavannaith than kaiyilae pitiththukkonndu, anthap pelisthananntaiyilae ponaan.And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in a shepherd's bag which he had, even in a scrip; and his sling was in his hand: and he drew near to the Philistine.